திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
262f8a78-c891-4eaf-8a26-70d17f5494db
-
multi-img1 of 2

விஜய் ஆடலுக்கு சவால்விடும் பூஜா

விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு நிகராக நடனமாட பயிற்சி பெற்று வரும் நாயகி பூஜா ஹெக்டே, "எனது ஆட்டம் விஜய்யின் ஆட்டத்துக்கு நிகராக இருக்குமே தவிர ஒருபோதும் என் திறமை சோடை போகாது," என்று சொல்கிறார்.

பொதுவாக விஜய்யுடன் 'டூயட்' பாடவேண்டும் என்பது அனைத்து நடிகைகளின் பெரும் ஆசையாக இருந்தாலும் அவருடன் நடனமாடும் தருணம் வந்தவுடன் நடிகைகளுக்கு உதறலும் சேர்ந்து வந்துவிடும். அந்த அளவு மின்னல் வேகத்தில் நடனமாடுவார் விஜய்.

தற்போது விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இக்காட்சிகளில் தன் திறன் காட்டி விஜய்யை அசரவைக்க முன்கூட்டியே இப்படத்தின் நடன மாஸ்டரை அழைத்து, ஒத்திகைப் பார்த்து களம் இறங்கியுள்ளார் பூஜா.

"விஜய்க்கு இணையாக ஆட்டம் பாட்டத்தில் அமர்க்களப்படுத்தி, இந்த ஒரே படத்தின் வழி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் என் பக்கம் ஈர்க்கப் போகிறேன்," என்றும் அவர் சொடக்கு போட்டுப் பேசியுள்ளதாகத் தகவல்.

'பஞ்ச்' வசனம் பேச மறுக்கும் நடிகர்

திரையுலகில் ஒரு நடிகர் பிரபலமாக, அவர்கள் அவ்வப்போது பேசும் 'பஞ்ச்' வசனமும் ஒரு முக்கிய காரணமாகி வருகிறது.

இதுபோல், நடிகர் விஜய் ஆண்டனி யிடம் ரசிகர்களைப் பார்த்து பேசுவதுபோல் 'பஞ்ச்' வசனம் பேசும்படி இயக்குநர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் 'அதெல்லாம் இப்போது வேண்டாம்' என்று மறுத்துவிட்டாராம். "இன்னும் ரசிகர்கள் என்னை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அவர்களின் அபிமான நாயகனாகும் சமயத்தில் 'பஞ்ச்' வசனம் பேசினால்தான் கை தட்டி, விசில் அடிப்பார்கள். இப்போது பேசினால் 'வளர்வதற்கு முன்பே ஆசையைப்பாரு' என்று கிண்டலடிப்பார்கள். எனவே, அதற்கான காலம் கனியும் வரை காத்திருக்கிறேன்," என்று தன்னடக்கத்துடன் சொல்கிறாராம்.