நடிகை ஷ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்று ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
வேறொன்றும் இல்லை. தாம் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை படம்பிடித்து வெளியிட்டுள்ளார் ஷ்ருதி.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்நிலையில் உண்மையாகவே குத்துச்சண்டை பயிற்சி பெற்று வரும் திரைக் கலைஞர்கள் அதுகுறித்த விவரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தனது பயிற்சியாளர் இர்ஃபான் கானுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை காணொளித் தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளார் ஷ்ருதி. இந்நிலையில், ஷ்ருதியின் இந்தப் பதிவுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இர்ஃபானிடம் திரையுலகைச் சேர்ந்த பலர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

