ஹன்சிகா நடித்துள்ள புதிய படத்தை பல்வேறு இந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் சீன, கொரிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றும்படி உருவாகி உள்ளது '105' திரைப்படம். அண்மையில்தான் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மேலும், திகில் கதை என்பதால் எந்த மொழியில் வேண்டும் என்றாலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது எளிதான பணியாக உள்ளது.
இதையடுத்து சீன, கொரிய, ஜப்பானிய மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

