தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரவிக்குமார்: சினிமா எளிதில் அழிந்துவிடாது

2 mins read
95b4f258-ff8c-4881-a32f-361cc54cff4d
கே.எஸ்.ரவிக்குமாருடன் (நடுவில்) இயக்குநர்கள் சபரி, சரவணன். -

'ஓடிடி' எனப்படும் இணையத்தளங்கள் மூலம் திரைப்படங்கள் வெளிவருவதால் திரையுலகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது 'கோப்ரா', 'மாளிகை', 'கூகல் குட்டப்பா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பல பிரம்மாண்ட வெற்றிப்படங்

களைக் கொடுத்திருப்பவர், அடுத்து அதேபோன்ற படங்களை இயக்க தயாராகி வருவதாகச் சொல்கிறார்.

"நான் சில படங்களை தயாரிக்கவும் செய்தேன். கமல் நடித்த 'தெனாலி'தான் நான் தயாரித்த கடைசி படம். அதன் பிறகு மீண்டும் படங்களை இயக்குவதில்

கவனம் செலுத்தினேன். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'கூகல் குட்டப்பா' படத்தை தயாரிக்கிறேன். எனது உதவி இயக்குநர்கள் சபரியும் சரவணனும் இணைந்து இயக்கும் படம் இது.

"திடீரென ஒரு நாள் என்னைத் தேடி வந்து ஒரு கதையை விவரித்தனர். அது மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் கதை என்றும் அதில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினர்.

"மலையாளப் பதிப்பை பார்த்தபோது எனக்கும் பிடித்திருந்தது. இருவரும் படத்தின் தயாரிப்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவரோ மறுபதிப்பு உரிமையைக் கூட வாங்காமல் இருந்தார். அவருக்குப் பதில் நானே படத்தை தயாரிக்க முன்வந்தேன்," என்றார் ரவிக்குமார்.

மீண்டும் படம் இயக்குமாறு நலன் விரும்பிகள் பலரும்

வற்புறுத்துகிறார்களாம். ஆனால், பெரிய நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தம்மால் இனி குறைந்த பொருள்செலவில் படம் இயக்க முடியாது என்கிறார். எனவே, பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பு அமையும்போது மீண்டும் இயக்குநர் ரவிக்குமாரை பார்க்க முடியுமாம்.

"ஓடிடி தளங்களால் திரைத்துறை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் சிலர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவை திறக்கப்பட்டதும் நிலைமை மாறும்.

"சினிமா வியாபாரத்தின் அடுத்த கட்டத்தில் நாம் இருக்

கிறோம். முன்பு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்பாகும். அதற்கே திரையரங்குகளில் வசூல் குறைந்ததாக பலர் கூறினர். அதனால் சினிமா தேய்ந்துவிடவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சித் தொடர்களால் பெண்கள் திரையரங்குக்கு வருவது குறையும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

"இதையடுத்து திருட்டு 'விசிடி', இணையத்தில் சட்டவிரோதமாக படத்தை வெளியிடுவது என்று பல தடைகளைக் கடந்து வந்து சினிமா வாழ்கிறது. திரையரங்குகளும் இயங்கி வருகின்றன.

"எனவே, 'ஓடிடி' என்பதை காலத்துக்கேற்ற மாற்றமாக பார்த்தால் சிக்கல் எழாது. திரையரங்குகள்தான் ரசிகர்களின் முதல் தேர்வாக இருக்கும்," என்று சொல்பவர், 'கூகல் குட்டப்பா' படமும் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்கிறார்.

தாம் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கோடம்பாக்கத்தில் பரவியதால்தான் தாம் தொடர்ந்து நடித்து வருவதாகச் சொல்லும் ரவிக்குமார், பிடித்த கதாபாத்திரங்கள் அமைந்தால் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.