கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

1 mins read
e0cf8fa7-3046-4009-a54a-01e550a75244
படம்: டுவிட்டர்/சிவகார்த்திகேயன் -

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், "இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம். இது என்றென்றும் நினைவுகூரத்தக்க நாள்," என்று தமது பதிவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

கவுண்டமணி கடைசியாக நடித்த படம் 'வாய்மை'. அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் தன் மனதுக்குப் பிடித்தமான ஒரு கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை எதற்காக சந்தித்தார் என்று குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை தனது படத்தில் நடிக்குமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்