வாணி: சவால்களை எதிர்கொள்ள ஆசை

வாணி: சவால்களை எதிர்கொள்ள ஆசை

2 mins read

கொரோனா தொற்­றுப் பர­வ­லுக்கு முன்­னர் தாம் ஒப்­புக்­கொண்ட படங்­கள் அனைத்­தி­லும் நடித்து முடித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் வாணி போஜன்.

கோடம்­பாக்­கத்­தில் வேக­மாக வளர்ந்து வரும் இளம் நடி­கை­களில் இவ­ரும் ஒரு­வர். இப்­போது பரத்­து­டன் புதிய படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

விக்­ரம், அவ­ரது மகன் துருவ் ஆகிய இரு­வ­ரும் இணைந்து நடிக்­கும் 'மகான்' படத்­தில் வாணி­யும் ஒரு நாயகி. கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கும் அந்­தப் படத்­தி­லும் தமக்கு கன­மான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ள­தாகச் சொல்­கி­றார்.

"கார்த்­திக் சுப்­பு­ரா­ஜின் தயா­ரிப்­பில் ஏற்­கெ­னவே இணை­யத்­தொ­டர் ஒன்­றில் நடித்­தி­ருக்­கி­றேன். நான் அவ­ரது தீவிர ரசி­கை­யும்­கூட. அவர் படம் இயக்­கும் பாணி ரொம்­பப் பிடிக்­கும்.

"'மகான்' படத்­தில் நானும் நடிக்க வேண்­டும் என கார்த்­திக் சுப்­பு­ராஜ் விரும்­பு­வ­தாக அறிந்­தேன். அவர் என்­னி­டம் கதையை விவ­ரித்­த­போது பல்­வேறு சுவா­ர­சி­ய­மான அம்­சங்­களும் திருப்­பங்­களும் இருப்­பது என்­னைக் கவர்ந்­தது. உடனே நடிக்க ஒப்­புக்­கொண்­டேன்," என்­கி­றார் வாணி.

'மகான்' பட நாய­கன் விக்­ரம் குறித்து தாம் நிறைய கேள்­விப்­பட்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், விக்­ர­மு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு இவ்­வ­ளவு விரை­வாக கிடைக்­கும் என தாம் எதிர்­பார்க்­க­வில்லை என ஒப்­புக்­கொள்­கி­றார்.

"பத்து நாள்­கள் தூங்­கா­மல் நடிக்க வேண்­டும் என்­றா­லும் விக்­ரம் சார் அதற்­குத் தயா­ராக இருப்­பார். படப்­பி­டிப்­பின்­போது அவர் எந்­நே­ர­மும் சுறு­சு­றுப்­பாக இருப்­பார், அபார சக்­தி­யு­டன் நடிப்­பார் என கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். அதை நேரில் பார்த்­த­போது வியப்­பாக இருந்­தது. அனை­வ­ரி­ட­மும் அன்­பா­கப் பேசு­வார்.

"அதே­போல் துருவ்­வும் கூட மிக இயல்­பா­ன­வர். முதல் படத்­தி­லேயே அனு­ப­வம் வாய்ந்த நடி­க­ரைப் போல் அவர் நடித்­தி­ருப்­பது என்னை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யது. அவ­ரி­டம் தந்­தை­யின் சாயல் அதி­கம் தெரி­யும். இனி சின்­னத்­திரை தொடர்­களில் என்­னைப் பார்க்க முடி­யுமா என்று சில ரசி­கர்­கள் கேட்­கி­றார்­கள். இதற்கு என்ன பதில் சொல்­வது எனத் தெரி­ய­வில்லை.

"தொலைக்­காட்சி தொடர்­கள்­தான் என்னை நடி­கை­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது. நான் ஓர­ளவு நடிக்­கி­றேன் என்­றால் அதற்கு சின்­னத்­தி­ரை­யில் கற்ற பாடங்­களும் அனு­ப­வ­மும்­தான் கார­ணம். சின்­னத்­தி­ரைக்­கும் சினி­மா­வுக்­கும் இடையே சில முக்­கி­ய­மான வித்­தி­யா­சங்­கள் உள்­ளன. அங்கு ஒரு தொட­ரின் நாய­கி­யாக ஐந்து ஆண்­டு­கள் கூட நடிப்­போம். சினி­மா­வில் ஓரு படத்­துக்­காக சில மாதங்­கள் மட்­டுமே அவ்­வாறு நடிக்­கி­றோம்.

"வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து சிறந்த நடிகை எனப் பெயர் எடுப்­ப­தில்­தான் எனது முழுக்­க­வ­ன­மும் உள்­ளது. யாருக்கு முத­லி­டம், யாருக்கு கடைசி இடம் என்­பதை அறிந்து கொள்­வ­தில் எல்­லாம் எனக்கு அறவே விருப்­பம் இல்லை. நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களை கவ­னித்­தால் நான் சொல்­வது உண்மை என்­பது புரி­யும்.

"வித்­தி­யா­ச­மான பாத்­தி­ரங்­கள் வேண்­டும் என்று விரும்­பிக் கேட்­கி­றேன். விருப்­பத்­து­ட­னும் ஈடு­பாட்­டு ­ட­னும் செய்­யும் எது­வும் நமக்­குப் பார­மாக இருக்­காது. இது­போன்ற சவால்­களை எதிர்­கொள்ள ஆசைப்­ப­டு­ கிறேன்," என்­கி­றார் வாணி.

சசி­கு­மா­ரு­டன் இவர் நடித்து வரும் படத்­தின் படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டது. விக்­ரம் பிர­பு­வு­டன் இணைந்து நடித்த படம் எந்த நேரத்­தி­லும் வெளி­யீடு காண தயா­ராக உள்­ள­தாம்.