'ஓடிடி' வெளியீடு: வரிசையில் நிற்கும் படங்கள்

'ஓடிடி' வெளியீடு: வரிசையில் நிற்கும் படங்கள்

1 mins read
20b57cdc-e4f7-467e-bd0b-12d21fedda5a
'துக்ளக் தர்பார்' படத்தில் பார்த்திபன், விஜய் சேதுபதி. -

ஒரு­பக்­கம் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டா­லும் மற்­றொரு பக்­கம் 'ஓடிடி' எனப்­படும் நேர­டி­யாக இணை­யத்­த­ளம் வழி வெளி­யி­டப்­படும் படங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­பா­டில்லை.

தற்­போது தமி­ழ­கத் திரை­ய­ரங்கு­களில் முதற்­கட்­ட­மாக 50 விழுக்­காடு இருக்­கை­களை நிரப்ப அனுமதி அ­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தில் சில படங்­க­ளின் தயா­ரிப்­புத்தரப்பு ஆர்­வம் காட்­ட­வில்லை.

அத­னால் முன்பே செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்­தின்­படி 'துக்­ளக் தர்­பார்', 'டிக்­கி­லோனா', 'கடைசி விவ­சாயி' ஆகிய படங்­கள் 'ஓடி­டி'­யில்­தான் வெளி­யா­கின்­றன.

எதிர்­வ­ரும் பிள்­ளை­யார் சதுர்த்தி பண்­டி­கை­யை­யொட்டி, விஜய் சேது­பதி, ராஷி­கண்ணா நடித்­தி­ருக்­கும் 'துக்­ளக் தர்­பார்' படம் செப்­டம்­பர் 10ஆம் தேதி சன் தொலைக்­காட்சி­யில் வெளி­யா­கிறது. இதன் 'ஓடிடி' உரி­மத்தை முன்­னணி நிறு­வ­னம் வாங்­கி­யி­ருக்­கிறது.

'காக்கா முட்டை' மணி­கண்­டன் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி நடித்­தி­ருக்­கும் 'கடைசி விவ­சாயி' பட­மும் முன்­னணி 'ஓடிடி' தளத்­தில் இம்­மாத இறு­தி­யில் வெளி­யாக உள்­ளது. சந்­தா­னம் நடித்த 'டிக்­கி­லோனா' பட­மும் தொலைக்­காட்சி, 'ஓடிடி' தளம் என அடுத்­த­டுத்து வெளி­யீடு காண உள்­ளது.

கடந்த ஏப்­ரலில் 'கர்­ணன்' படம் வெளி­யான சம­யத்­தில் தொற்­றுப் பர­வல் பாதிப்பால் மீண்டும் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டன. அப்போது 'ஓடிடி' தளங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. ஆனால் இப்­போ­தும் பல படங்­கள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யீடு காண்­பது திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­களுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கத் தெரி­கிறது. இதற்­கி­டையே, சிவ­கார்த்­தி­கே­யன் நடிக்கும் 'டாக்­டர்' பட­ம் நேரடி­யாக இணை­யத்­தில் வெளி­யா­காது என அறிவிக்கப்பட்டுள்ளது.