செப்டம்பர் 10ஆம் தேதி வருகிறார் 'தலைவி'

செப்டம்பர் 10ஆம் தேதி வருகிறார் 'தலைவி'

1 mins read

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வாகி உள்ள 'தலைவி' படம் எதிர்­வ­ரும் செப்­டம்­பர் 10ஆம் தேதி வெளி­யீடு காணும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

படத்­தின் புதிய சுவ­ரோட்­டியை வெளி­யிட்டு, அப்­ப­டக்­கு­ழு­வி­னர் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­துள்ளனர்.

ஏற்­கெ­னவே இப்­ப­டத்­தின் தணிக்கை முடிந்து 'யு' சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஏ.எல்.விஜய் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் ஜெய­ல­லிதா கதா­பாத்­தி­ரத்­தில் கங்­கனா ரணா­வத் நடித்­துள்­ளார். இவ­ரு­டன் அர­விந்த்­சாமி, மது­பாலா, சமுத்­தி­ரக்­கனி உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.