விருதுகளுக்காகவும் புகழுக்காகவும்தான் தாம் திரையுலகில் நீடிப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் தமன்னா.
தமக்கு அப்படியோர் எண்ணம் இல்லை என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"பணத்துக்காகத்தான் சினிமாவில் நடிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டால், 'ஆமாம்' என்று தயங்காமல் ஒப்புக்கொள்வேன். சினிமா என்பது நான் சார்ந்துள்ள ஒரு தொழில். அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். அப்படியெனில் எனது உழைப்புக்கு உரிய பணத்தை நான் பெறுவதில் என்ன தவறு?" என்று கேட்கிறார் தமன்னா.
திரையுலகில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும், ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்க வேண்டும் என்பது போன்ற இலக்குகள் எதுவும் தமன்னாவிடம் இல்லை.
புகழுக்காக ஆசைப்படவில்லை என்றாலும் இதுவரை கிடைத்த புகழை இழக்க மனமில்லை என்றும் சொல்கிறார்.

