திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
94337a99-8d03-4587-8be6-dbe154257d83
-
multi-img1 of 2

மன்னிப்பு கோரினார் சமந்தா

சர்ச்சைக்குரிய 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் நடித்தது தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார் சமந்தா.

அண்மைய பேட்டி ஒன்றில், யார் மனதையும் காயப்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் அவ்வாறு நடந்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். ஆனால், அந்த இணையத் தொடர் வெளியான பின்னர் பல கூப்பாடுகள் நின்றுவிட்டன.

"இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தொடர் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் கவனித்தேன்," என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடர் சர்ச்சையை ஏற்படுத்திய போது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சமந்தா, இப்போதுதான் அது குறித்து பேசியுள்ளார்.

மணிரத்னத்தை புகழ்ந்த ஜெயம் ரவி

'பொன்னியின் செல்வன்' படத்தில் தமக்கு வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மணிரத்னத்துடன் பணியாற்றியது தமது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

"தலைமைப் பண்பும் கற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை, இன்றியமையாதவை. இந்த பிரம்மாண்ட படைப்பை இவ்வளவு துல்லியமாக நீங்கள் முன்னெடுத்ததும் அதே நேரத்தில் சுற்றி இருப்பவர்களுக்கு கற்றுக்கொடுத்ததும் பாராட்டுக்குரிய விஷயம்.

"உங்கள் ஆசீர்வாதம், நகைச்சுவை உணர்வு, அக்கறை காட்டும் இயல்பு ஆகிய அனைத்தையும் கடந்து, என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை என எல்லாவற்றுக்கும் நன்றி. உங்களோடு படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லையே என்று நிச்சயம் வருந்துவேன்.

"மீண்டும் இணைந்து பணிபுரியும் நாளை எதிர்நோக்குகி றேன். 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரு பாகங்களும் முடிந்துவிட்டன. கனத்த இதயத்தோடு அடுத்த புது முயற்சி களுக்குச் செல்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.