'லாபம்' படம் செப்டம்பர் 9ல் வெளியீடு

1 mins read
efe71e34-b12e-4198-b532-8dbf85f0df61
-

எஸ்.பி.ஜன­நா­தன் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி, ஷ்ருதி ஹாசன், ஜெக­ப­தி­பாபு நடிப்­பில் உரு­வாகி உள்ள 'லாபம்' படம் எதிர்­வ­ரும் செப்­டம்­பர் 9ஆம் தேதி வெளி­யா­கிறது. அப்­ப­டக்­கு­ழு­வி­னர் இதை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­னர்.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு முடி­வ­டைந்து, தொழில்­நுட்­பப் பணி­கள் நடை­பெற்று வந்­த­போ­து­தான் இயக்­கு­நர் ஜன­நா­தன் கால­மா­னார். இத­னால் அப்­ப­ணி­கள் சில காலம் முடங்­கின. பின்­னர் ஊர­டங்குத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­போது, இந்­தப் பணி­களை வேக­மாகச் செய்து முடித்­த­னர்.

சேது­பதி புரொ­டக்­‌ஷன்ஸ், 7சி.எஸ். எண்­டர்­டெ­யின்­மெண்ட் ஆகிய நிறு­வ­னங்­கள் இணைந்து இப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ளன. இப்­போது திரை­ய­ரங்­கு­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து, லாபம் வெளி­யீட்­டுத் தேதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.