'சண்டை போட பிடிக்கும்'

3 mins read
c728971f-e0e2-4bfe-9f0d-39b09dc020a0
-

இந்த உல­கத்தை துணிச்­ச­லு­டன் எதிர்­கொள்­ளும் ஆற்­றல் தம்­மி­டம் உள்­ளது என்­கி­றார் இளம் நாய­கன் அதர்வா.

தமது தந்­தை­யும் நடி­க­ரு­மான முரளி­யின் மறை­வுக்­குப் பின்­னர் திரை­யு­ல­கில் தமது ஒவ்வோர் அடி­யை­யும் மிகக் கவ­ன­மாக எடுத்து வைப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கோடம்­பாக்­கத்து சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­க­ளின் செல்­லப்­பிள்ளை என்­று­தான் அதர்­வா­வைப் பெரும்­பா­லா­னோர் குறிப்­பி­டு­கின்­ற­னர். கார­ணம், சண்­டைக் காட்­சி­களுக்­காக அவர் தரும் உழைப்பு அப்­ப­டிப்­பட்­டது.

சண்­டைக் காட்­சி­கள் என்­றால் அதர்வா உற்­சா­க­மா­கி­வி­டு­கி­றார். கடி­ன­மான காட்சி அமைப்­பி­லும் கூட துணிச்­ச­லு­டன் பங்­கேற்­பார்.

"ஏதே­னும் ஒரு விஷ­யத்தைப் புதி­தாக முயற்சி செய்­யும்­போது நம் உட­லில் ரத்த ஓட்­டம் வேக­மெ­டுக்­கும். அப்­போது மன­துக்­குள் ஒரு­வித உற்­சா­க­மும் வேக­மும் ஏற்­படும்.

"இந்த உணர்வை அனு­ப­விப்­பது எனக்­குப் பிடித்­த­மான ஒன்று.

"முதன் முத­லாக பய­ணம் மேற்­கொண்­ட­போ­தும் மிக உய­ர­மான இடத்­தில் இருந்து கயிறு கட்­டிக்­கொண்டு குதிக்­கும் (Bungee Jump) போதும் இந்த உணர்வு ஏற்­பட்­டது.

"ஆனால் ஒவ்­வொரு முறை­யும் சண்­டைக் காட்சி­களில் நடிக்­கும்­போது நான் இதே உணர்­வைப் பெறு­கி­றேன். அத­னால்­தான் மிகுந்த ஈடு­பாட்­டு­டன் நடிக்க முடி­கிறது," என்­கி­றார் அதர்வா.

எந்­த­வொரு கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றா­லும் அதற்கு ஏற்ற நடிப்பை தம்­மால் வழங்க இய­லுமா எனப் பல­முறை யோசித்த பிறகே முடி­வெ­டுப்­பது இவ­ரது வழக்­க­மாக உள்­ளது.

மன­தில் சிறிய சந்­தே­கம் எழுந்­தா­லும்­கூட, அது நிவர்த்தி ஆகும்­வரை விட­மாட்­டா­ராம்.

எதிர்­மறை கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை அதர்­வா­வுக்­கும் உள்­ளது. அதே­போல் வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­களில் நடிக்­க­வும் ஆர்­வம் கொண்­டுள்­ளார்.

இதற்கு முன்பு இப்­ப­டி­யொரு வாய்ப்பு தேடி வந்­த­தாம். ஆனால் அன்­றைய சூழல் கார­ண­மாக அந்த வாய்ப்பை ஏற்க முடி­யா­மல் போன­தாம்.

"ஒரு­வேளை இப்­போது அப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு தேடி­வந்­தால் தயங்­கா­மல் ஒப்­புக்­கொள்­வேன். அப்பா (முரளி) இருந்த வரை எல்­லாம் எளி­தாக இருந்­தது. நான் அவ­ரது பாது­காப்­பில் இருப்­ப­தாக உணர்ந்­தேன்.

"ஆனால் அவ­ரது மறை­வுக்­குப் பிறகு ஒவ்­வோர் அடியை எடுத்து வைப்­ப­தும் பெரும் சவா­லாக இருந்­தது. மன­த­ள­வில் பெரும் அழுத்­தத்தை எதிர்­கொண்­டேன்.

"ஆனால் இப்­போது நிலைமை அப்­ப­டி­யல்ல. பல்­வேறு சவால்­க­ளை­யும் அழுத்­தங்­க­ளை­யும் கடந்து வந்­த­தில் பக்­கு­வ­மா­கி­விட்­டேன். இனி­மேல் எது­வும் எனக்கு சவா­லாக இருக்­காது. அனைத்­தை­யும் எனது பொறுப்­பா­கப் பார்க்­கி­றேன்," என்று சொல்­லும் அதர்வா, தமது தந்தை நடிப்­பில் வெற்­றி­பெற்ற திரைப்­ப­டங்­க­ளின் மறு­ப­திப்­பில் நடிக்க விரும்­ப­வில்லை என்­கி­றார்.

முரளி நடித்து பெரும் வெற்­றி­பெற்ற 'இத­யம்' படத்­தின் மறு­ப­திப்­பில் நடிக்­கக் கேட்டு தம்மை அணு­கி­ய­போது முடி­யாது என மறுத்து­விட்­டா­ராம். காலத்­துக்கு ஏற்ப கதையை மாற்றி அமைக்­கும்­போது அசல் படைப்­பின் முக்­கிய அம்­சங்­கள் சிதைந்­து­வி­டக்­கூ­டும் என்­றும் அதைச் செய்ய தாம் விரும்­ப­வில்லை என்­றும் விளக்­கம் அளிக்­கி­றார்.

ஒரு நடி­க­ராக எந்த வகை­யில் உங்­களை மெரு­கேற்­றிக்கொண்­ட­தா­கக் கரு­து­கி­றீர்­கள் என்று கேட்டபோது, "ஒரு நடி­கன் என்ற வகை­யில் எனக்­கான எல்­லை­கள் என்று எதை­யும் இது­வரை வகுத்­துக் கொண்­ட­தில்லை. ஒரு படத்­தில் நடிப்­ப­தற்­கான அடிப்­படை விதி­மு­றை­கள் என்று எதை­யும் நான் பின்­பற்­று­வ­தில்லை.

"இயக்­கு­நர் பாலா­, 'பர­தேசி' படத்­தில் நடிக்க என்­னைத் தேர்வு செய்­த­போது எனது முந்­தைய படங்­க­ளின் வெற்றி தோல்­வி­யையோ, எனது கடந்­த­கால நடிப்பு குறித்தோ அவர் யோசிக்­க­வில்லை.

"தனது கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு உயிர் கொடுக்­கும் ஒரு நடி­கன் கிடைத்­தால் போதும் என்ற முடி­வு­டன்­தான் என்னை ஓப்­பந்­தம் செய்­தார். ஒரு நடி­க­னாக என்னை முழு­மை­யாக மெரு­கேற்­றி­ய­வர் அவர்­தான். என்னை வைத்­துப் படம் எடுக்­கும் அனைத்து இயக்­கு­நர்­களும் என்னை இவ்­வாறு பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­பதே எனது வேண்டு­கோள்," என்­கி­றார் அதர்வா.

, :   

அதர்வா