கைகொடுத்த தயாரிப்பாளர்: சிம்புவுக்கான தடை நீங்கியது

கைகொடுத்த தயாரிப்பாளர்: சிம்புவுக்கான தடை நீங்கியது

2 mins read
17a103b3-8d55-43f8-8a8b-97a15673b08d
தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் (வலது ஓரம்), சிம்பு (நடுவில்), அவரது தாயார் உஷா ராஜேந்தர். -

சிம்பு நடிக்­கும் புதுப்­ப­டங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு அளிக்­கப் போவ­தில்லை என தமிழ்த் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் சங்­கம் அண்­மை­யில் அறி­வித்­தது.

இத­னால் சிம்பு தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்­தது. சில தயா­ரிப்­பா­ளர்­கள் அளித்த புகார்­க­ளின் உண்­மைத் தன்­மையை உறுதி செய்­யா­மல், தனது மக­னுக்கு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் தடை­வி­தித்­துள்­ளது என்­றும் இது­கு­றித்து பிர­த­மர் மோடி, முதல்­வர் ஸ்டா­லி­னி­டம் முறை­யி­டப் போவ­தா­க­வும் சிம்­பு­வின் தாயார் உஷா ராஜேந்­தர் அண்­மை­யில் கூறி இருந்­தார்.

இந்­நி­லை­யில் சிம்­பு­வுக்கு விதிக்­கப்­பட்ட தடை விலக்­கப்­பட்­ட­தாக தயா­ரிப்­பா­ளர் சங்­கம் அறி­வித்­துள்­ளது.

சிம்பு தகுந்த ஒத்­து­ழைப்பு அளிக்­கா­த­தால், அவரை வைத்து தாம் தயா­ரித்த 'அன்­பா­ன­வன் அச­ரா­த­வன் அடங்­கா­த­வன்' படத்தை உரிய நேரத்­தில் முடிக்க இய­லா­மல் போன­தாக தயா­ரிப்­பா­ளர் மைக்­கேல் ராயப்­பன் புகார் அளித்­தி­ருந்­தார். இத­னால் தமக்கு சுமார் இரு­பது கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டது என்­பது அவ­ரது குற்­றச்­சாட்டு.

இதே­போல் தேனாண்­டாள் பிலிம்ஸ், திருப்­பதி பிர­தர்ஸ் உட்­பட சில நிறு­வ­னங்­கள் சிம்பு மீது புகார் அளிக்­கவே, தயா­ரிப்­பா­ளர் சங்க நிர்­வா­கி­கள், அவை அனைத்­துக்­கும் தீர்வு காணு­மாறு சிம்புவைக் கேட்­டுக்கொண்­டது. ஆனால், இதற்­கும் சிலம்­ப­ர­சன் ஒத்­து­ழைக்­க­வில்லை என அடுத்­தக்­கட்ட புகார்­களும் எழுந்­தன.

இத­னால் சிம்பு நடிக்­கும் புதுப்­படங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்த தயா­ரிப்­பா­ளர் சங்­கம் தடை­வி­திப்­ப­தாக அறி­வித்­தது. இத­னால் கவு­தம் மேனன் இயக்­கும் புதுப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பை துவங்க முடி­ய­வில்லை.

இதை­ய­டுத்து புகார் தெரி­வித்­த­வர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த சிம்பு தரப்பு முன்­வந்­தது. நேற்று முன்­தி­னம் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கத்­தில் நடந்த பேச்­சு­வார்த்­தை­யில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் கலந்து கொண்­ட­னர்.

அப்­போது சிம்­பு­வுக்கு உதவ தாம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் சிம்பு தொடர்­பான சில பணப் பரி­மாற்­றங்­க­ளுக்கு தாம் பொறுப்­பேற்­ப­தா­க­வும் தயா­ரிப்­பா­ளர் ஐசரி கணேஷ் கூறி­ய­தா­கத் தெரி­கிறது. அதன் கார­ண­மாக சிம்­பு­வுக்கு விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

எனினும் தயாரிப்பாளர் மைக் கேல் ராயப்பன் உடனான பிரச்சி னைக்கு மட்டும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்கு அதையும் பேசித் தீர்க்க முடியும் என சிம்பு தரப்பு உறுதி அளித்துள்ளது.

"இந்த பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்தால்தான் சிம்புவால் மீண்டும் தரமான படங்களில் கவனம் செலுத்த முடியும் என நினைத்தோம். இப்போது அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் பழைய சிம்புவை திரையில் காண முடியும்," என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.