தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவில் கட்டி குடமுழுக்கு நடத்திய யோகி

1 mins read
0ec5d2be-ab79-4c71-afdb-d730cfa0ba1d
-

தமது சொந்த செலவில் கோவில் கட்டி, குடமுழுக்கு நடத்தி உள்ளார் யோகி பாபு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம் பேடு இவரது சொந்த கிராமம் ஆகும். அங்குள்ள தமது நிலத்தில் வராகி அம்மன் கோவிலை கட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வில் குடும்பத்துடன் பங்கேற்றார் யோகி பாபு. பட வாய்ப்பு கிடைக்காமல் சிரமத்தில் இருந்தபோது தமக்கு கடவுள் மட்டுமே துணை நின்றதாக யோகி அடிக்கடி சொல்வார்.