ஆர்வம் காட்டிய டாப்சி

ஆர்வம் காட்டிய டாப்சி

3 mins read
8e7c0e4c-d612-411c-a532-c6174b4c5cf0
-

வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள் அமைந்­தால் தமிழ் இயக்­கு­நர்­க­ளின் பார்வை விஜய் சேது­பதி பக்­கம்­தான் முத­லில் திரும்­பு­கிறது. அந்த வகை­யில் அறி­முக இயக்­கு­நர் தீபக் தனது முதல் படத்­தி­லேயே விஜய் சேது­ப­தியை நடிக்க வைத்­தி­ருக்­கி­றார். நாய­கி­யாக டாப்சி நடித்­தி­ருக்­கி­றார் என்­பது மற்­றோர் ஆச்­ச­ரி­யத் தக­வல்.

படத்­தின் தலைப்பு 'அன­பெல் சேது­பதி'. குடும்­பத்­து­டன் அமர்ந்து பார்க்­கும்­ப­டி­யான கதையை தான் சொல்­லப் போகி­றார்­க­ளாம்.

'வைதேகி காத்­தி­ருந்­தாள்', 'மெல்­லத்­தி­றந்­தது கதவு', 'அம்­மன்­கோ­வில் கிழக்­காலே' உள்­ளிட்ட வெற்­றிப் படங்­க­ளைத் தந்த அந்­நாள் இயக்­கு­நர் ஆர்.சுந்­தர்­ரா­ஜ­னின் வாரி­சு­தான் தீபக். ஆனால் தந்­தை­யி­டம் தொழில் கற்­க­வில்லை. இயக்­கு­நர் ஏ.எல்.விஜய்­யி­டம்­தான் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்றி நல்ல அனு­ப­வங்­க­ளை­யும் நுணுக்­கங்­க­ளை­யும் கற்­ற­தா­கச் சொல்­கி­றார் தீபக்.

சரி... சேது­பதி கால்­ஷீட் கிடைத்­தது எப்­படி?

"படத்­தின் தலைப்­பைக் கேட்­ட­தும் திகில் பட­மாக இருக்­குமோ என்று யோசிக்­கத் தோன்­றும். ஆனால் இது அப்­ப­டிப்­பட்ட படம் அல்ல. அனுஷ்கா நடித்த 'அருந்­ததி' படத்­தில் கடந்து போன ஜென்­மத்­தில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளைக் காட்டி இருப்­பார்­கள். அது­போல் இதி­லும் ஓரு பகுதி இடம்­பெ­று­கிறது. 1948ஆம் ஆண்டு இந்த 'ஃபிளாஷ்­பேக்' பகு­தி­யில் சேது­பதி அண்­ணன் மன்­னர் வேடத்­தில் நடித்­துள்­ளார்.

"பட வேலை­க­ளைத் தொடங்­கும் முன்பே இது குழந்­தை­களும் அமர்ந்து பார்க்­கக்­கூ­டிய பட­மாக இருக்க வேண்­டும் என்­பதை முடிவு செய்­து­விட்­டோம். அப்­ப­டித்­தான் படம் உரு­வாகி உள்­ளது," என்­கி­றார் தீபக்.

முழுப் படத்­தை­யும் வட இந்­திய நக­ர­மான ஜெய்ப்­பூ­ரில்­தான் பட­மாக்­கி­னோம். தயா­ரிப்­பா­ளர் சுத­னி­டம் கதை­யைச் சொன்­ன­போது உட­ன­டி­யாக முன்­ப­ணத்­தைக் கொடுத்து, பட வேலை­களை தொடங்­கு­மாறு கூறி­விட்­டார். இதை நான் எதிர்­பார்க்­கவே இல்லை. பிறகு யோகி பாபு­வி­டம்­தான் கதையை முழு­மை­யா­கச் சொன்­னேன். அதன் பிறகு சேது­பதி அண்­ணன், டாப்சி என்று ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் கதை சொன்­ன­போது என் னையும் அறி­யா­மல் அது மேலும் மெரு­கே­றி­யது.

"உண்­மை­யா­கவே சேது­பதி, டாப்சி என முன்­ன­ணி­யில் உள்ள கலை­ஞர்­களை மன­தில் வைத்­து­தான் இந்­தக் கதையை எழு­தி­னேன். டாப்சி மூன்று முறை கதை கேட்­டி­ருப்­பார். அவ­ருக்கு இதில் நகைச்­சுவை தூக்­க­லாக உள்ள கதா­பாத்­தி­ரம். அவ­ரும் யோகி பாபு­வும் திரை­யில் தோன்­றும் ஒவ்­வொரு காட்­சி­யும் சிரிக்க வைக்­கும் என்­ப­தற்கு இப்­போதே உத்­த­ர­வா­தம் தர முடி­யும்.

"இன்று இந்­தி­யாவே உற்­றுக் கவ­னிக்­கும் ஒரு நடி­கை­யாக வளர்ந்­துள்­ளார் டாப்சி. அவ­ருக்­குத் தமி­ழில் பேச­வ­ராது. ஆனால் நாம் பேசு­வதை புரிந்­து­கொள்­வார். எந்த மொழி­யாக இருந்­தா­லும் சவா­லான கதைக்­க­ளங்­க­ளா­கத் தேர்வு செய்து நடிக்­கும் அவ­ரும்­கூட, 'சேது­ப­தி­யு­டன் நடிக்க ஆர்­வ­மாக இருக்­கி­றேன்' என்று சொன்­ன­போது எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. அது­தான் சேது­பதி அண்­ண­னின் பலம்.

"அண்­ண­னைப் போல் நட்­பு­டன் பழ­கக்­கூ­டி­ய­வர்­க­ளைப் பார்ப்­பது அரிது. வெளிப்­ப­டை­யா­கப் பேசக் கூடி­ய­வர். படப்­பி­டிப்பு தளத்­துக்­குள் அவர் நுழைந்­தாலே அங்­குள்ள அனை­வ­ருக்­கும் உற்­சா­கம் வந்­து­வி­டும். அனை­வ­ருக்­கும் ஒரு வணக்­கம் சொல்லி அந்த நாளை இனி­தாக்­கு­வார்.

"அவ­ருக்கு இந்­தக் கதை­யில் மிகுந்த ஆர்­வம் இருந்­தது. நடி­க­ராக மட்­டு­மல்­லா­மல், 15 நாள்­கள் என்­னோடு அமர்ந்து முழுக் கதை­யை­யும் செதுக்­கிக் கொடுத்­தார். வேறு படத்­தின் படப்­பி­டிப்­பில் இருந்­தா­லும்­கூட திடீ­ரென தொடர்பு கொண்டு பேசு­வார். 'நேற்று ஓரு காட்சி பற்றி பேசி­னோமே... அதை இப்­ப­டிச் செய்­தால் என்ன' என்று புது யோசனை கூறுவார். அந்த அள­வுக்கு அர்ப்­ப­ணிப்­பு­டன் இருந்­தார்.

"அவ­ருக்கு நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கி­றேன்," என்று சொல்­லும் தீபக், இயக்­கு­நர் ஏ.எல்.விஜய்­யி­டம் 'தாண்­ட­வம்', 'சைவம்', 'தலைவா' ஆகிய மூன்று படங்­களில் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். குரு­வி­டம் கற்­றுக்­கொண்ட நுணுக்­கங்­கள்­தான், தனித்து படம் இயக்­கும் துணிச்­ச­லைத் தந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

'அன­பெல் சேது­பதி'யில் ராதிகா, ஜெக­பதி­பாபு, வெண்­ணிலா கிஷோர், சேத்­தன், தேவ­தர்­ஷினி, சுரே­கா­வாணி, சுப்பு பஞ்சு, மது­மிதா, சுரேஷ்­மே­னன் ஆகி­யோ­ரும் உள்­ள­னர். அனை­வ­ரை­யும் ஒரு­சேர இயக்­கி­யதை நினைத்­துப் பார்த்­தால் தமக்கே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது என்­கி­றார் தீபக். இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்­சித்­தொ­குப்பு விரை­வில் வெளி­யா­கிறது. அதைப் பார்த்­தால் படத்­தின் கதை, கதா­பாத்­தி­ரங்­க­ளின் தன்மை புரி­யு­மாம். கிஷோர் என்­ப­வர் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார்.

, :   

டாப்சி