பிறந்தநாளை ஒட்டி தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் விஷால். இம்முறை அவரை இயக்கப்போவது சரவணன்.
புதுப்படத்திற்கு 'வீரமே வாகை சூடும்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் முதல் தோற்றச் சுவ ரொட்டியையும் வெளியிட்டுள்ளனர்.
விஷால் ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனராம். பின்னர் ஹைதராபாத் செல்கிறதாம் படக்குழு.

