அம்மு: எல்லாமே பிடித்த பாத்திரங்கள்

அம்மு: எல்லாமே பிடித்த பாத்திரங்கள்

3 mins read
bcb0c9b9-d59f-44ac-88b2-7ec31c9776af
-

பெரிய எதிர்­பார்ப்­பு­கள் ஏதும் இல்­லா­மல்­ தான் நடிக்க வந்­த­தா­க­வும் குறு­கிய காலத்­தில் திரை­யு­ல­கத்­தி­னர், ரசி­கர்­க­ளின் அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளது என்­றும் சொல்­கி­றார் 'அம்மு' அபி­ராமி.

'ராட்­ச­சன்' படம் பார்த்­த­வர்­கள் அதில் 'அம்மு' எனும் பள்ளி மாண­வி­யாக நடித்த அபி­ரா­மியை நிச்­ச­யம் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

அதன் பல­னாக வெற்­றி­மா­றன், பாலாஜி சக்­தி­வேல், ஜித்து ஜோசப், ஹரி என்று பல இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் ஏதே­னும் ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் இவ­ரைப் பார்க்க முடி­கிறது. அனைத்­தி­லுமே அழுத்­த­மான கதா­பாத்­தி­ரங்­கள் அமை­வ­து­தான் பெரும் மன நிறை­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளிப்ப தாகச் சொல்­கி­றார் அம்மு.

சென்­னை­யில் பிறந்து வளர்ந்த அபி­ராமி பள்­ளி­யில் படிக்­கும்­போதே தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­கத் தொடங்­கி­விட்­டா­ராம். குழந்­தை­க­ளுக்­கான ஒரு நிகழ்ச்­சி­யில் தொகுப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னா­ராம்.

"அதன் பிறகு நாட­கங்­கள் பல­வற்­றில் ஆர்­வத்­து­டன் பங்­கேற்­றேன். அப்­போ­து­தான் நடிப்­பின் மீதான எனது ஆர்­வம் வெகு­வாக அதி­க­ரித்­தது," என்­கி­றார் அபி­ராமி.

பத்­தாம் வகுப்­பில் நல்ல மதிப்­பெண்­கள் எடுத்­த­போது அதைக் கொண்­டா­டும் வித­மாக தன் தாயா­ரு­டன் படம் பார்க்க திரை­ய­ரங்­குக்கு சென்ற இவரை, அங்கு 'ராட்­ச­சன்' பட இயக்­கு­நர் ராம்­கு­மார் பார்க்க நேர்ந்­தி­ருக்­கிறது. உட­ன­டி­யாக தனது உதவி இயக்­கு­நர் மூலம் அம்­மு­வின் பெற்­றோரை அணுகி பேச வைத்­துள்­ளார்.

"அதன் பிறகு நடந்­தது எல்­லாம் உங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­கும். என் அப்­பா­வும் சினிமா துறை­யில் இருப்­ப­வர்­தான். ஒலிப்­ப­திவு நிபு­ண­ரான அவர், பல வெற்­றிப் படங்­களில் பணி­யாற்­றி­ய­வர். சினி­மா­வில் நடிப்­பதை அவர் எதிர்க்­க­வில்லை," என்று சொல்­லும் அபி­ராமி, இது­வரை தாம் ஏற்று நடித்த அனைத்து பாத்­தி­ரங்­க­ளுமே தமக்­குப் பிடித்­த­மா­னவை என்­கி­றார்.

"விஜய் அண்­ணா­வின் 'பைரவா' படத்­தின் ஒலிப்­ப­தி­வா­ள­ராக அப்பா பணி­யாற்­றி­னார். ஒரு­நாள் அந்­தப் படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­னார். அதன் மூலம் கிடைக்­கும் அனு­ப­வம் பின்­னாள்­களில் பெரும் உத­வி­யாக இருக்­கும் என்­றார்.

"அத­னால் சிறிய வேடத்­தில் நடித்­தேன். அப்­போ­து­தான் அப்பா சொன்­னது எவ்­வ­ளவு உண்மை என்­பது தெரியவந்­தது. துணை நடி­கர்­க­ளோடு கூட்­டத்­தில், வெயி­லில் நின்று நடிப்­பது எவ்­வ­ளவு சிர­மம் என்­பதை புரிந்­து­கொண்­டேன். இப்­ப­டித்­தான் எனது ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் நல்ல அனு­ப­வ­மாக மாறி என்னை வளர்த்­துக்­கொள்ள உதவி இருக்­கிறது," என்­கி­றார் அபி­ராமி.

'ராட்­ச­சன்' படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்­பான 'ராட்­ஷ­சுடு', 'அசு­ரன்' படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்­பான 'நரப்பா' இரண்­டி­லுமே இவர்­தான் நடித்­துள்­ளார். 'அசு­ரன்' படத்­தில் நடிக்­கப்­போ­வது தெரி­யா­ம­லேயே அதில் ஒப்­பந்­த­மா­னா­ராம். முதல் படப்­பி­டிப்பு முடிந்த பிற­கு­தான் அந்த விவ­ரம் தெரிய வந்­தி­ருக்­கிறது.

"நாளை படப்­பி­டிப்பு எனில், முந்­தைய நாள்­தான் எனக்­குத் தக­வல் வந்­தது. என்ன படம், என்ன வேடம், யார் கதா­நா­ய­கன், நாயகி என எது­வும் தெரி­யா­ம­லேயே படப்­பி­டிப்பு நடந்த இடத்­துக்­குச் சென்­றோம்.

"அங்கு எனக்­கும் தனு­ஷுக்கு மான காட்­சி­களை எடுக்­கத் தொடங்­கி­னார் இயக்­கு­நர். தனுஷை நான் 'மாமா' என்று கூப்­பி­டு­வது, அவர் எனக்கு கால­ணி­கள் தைத்­துக் கொடுப்­பது போன்ற காட்­சி­கள் முத­லில் பட­மாக்­கப்­பட்­டன. 'கத்­த­ரிப் பூ அழகி' பாட­லும் முடிந்­தது. பிற­கு­தான் அது 'அசு­ரன்' படம் என்­ப­தும் தனு­ஷின் காத­லி­யாக நான் நடிக்­கி­றேன் என்­ப­தும் புரிந்­தது.

"கிடைத்த அங்­கீ­கா­ரத்தை காப்­பாற்­றிக் கொள்ள வேண்­டும் என நினைக்­கி­றேன்," என்கிறார் அம்மு அபி­ராமி.

, :   

'அம்மு' அபிராமி