'அசுரன்' வெற்றியைத் தொடர்ந்து கென் கருணாஸ் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த உற்சாகத்தில் இருந்தவரை மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க அழைத்துள்ளார் வெற்றிமாறன். 'ராஜன் வகையறா' என்ற தலைப்பில் புதிய இணையத் தொடரை இயக்குகிறார் வெற்றிமாறன். அதில்தான் கென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவான வெற்றிப்படம் 'வடசென்னை'. அன்பு, ராஜன், செந்தில், குணா என நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார் வெற்றிமாறன். இதில் அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க, ராஜனாக அமீர் நடித்திருந்தார். இவ்விரு கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகிறது 'ராஜன் வகையறா' தொடர். ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை இதில் காட்சிப்படுத்த உள்ளனர். இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்க உள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

