ஹாட்ஸ்டார் தளத்தில் 'அனபெல் சேதுபதி' - வரும் செப்டம்பர் 17ஆம் தேதி

ஹாட்ஸ்டார் தளத்தில் 'அனபெல் சேதுபதி' - வரும் செப்டம்பர் 17ஆம் தேதி

1 mins read
2f069a1e-c429-4d3d-9787-97eb2aa9b863
-

காமெடி திகில் படமான 'அனபெல் சேதுபதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியீடு காணவுள்ளது.

காலனித்துவ இந்தியாவில் இடம்பெறுவது போலக் காண்பிக்கும் திரைப்பட முன்னோட்டத்தில் விஜய் சேதுபதி ஜமீந்தாராவும் தாப்சி வெள்ளைக்காரப் பெண்ணாகவும் நடிப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றுள்ள யோகி பாபுவுடன் துணை கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், ஜகபதி பாபு, சேட்டன், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பழைய திரைப்பட நடிகர் ஆர் சுந்தரராஜனின் மகன் தீபன் சுந்தரராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.