தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான புதுப் படங்கள் வெளியீடு காண காத்திருக்கின்றன.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள நான்கு புதுப்படங்கள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா நெருக்கடி வேளையில் பத்து படங்களில் நடித்து முடித்துள்ளார் சேதுபதி. அவற்றுள் 'துக்ளக் தர்பார்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'அனபெல் சேதுபதி' ஆகிய நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
செப்டம்பர் 9ஆம் தேதி 'லாபம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மறுநாளே பிள்ளையார் சதுர்த்தியன்று 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகும். பின்னர் உடனடியாக 'ஓடிடி'யிலும் வெளியாகும் என தயாரிப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அனபெல் சேதுபதி' திரைப்படம் இம்மாதம் 17ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாகும். 'கடைசி விவசாயி' இம்மாத இறுதியில் வெளியாகிறது.
இதற்கிடையே, 'மாமனிதன்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட மற்ற படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியீடு காணும் என சேதுபதி தரப்பு கூறுகிறது. இதற்கிடையே, '96' பட இயக்குநர் பிரேம்குமாருடன் மீண்டும் இணைய உள்ளார் சேதுபதி.
, :

