திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
b2cb5736-1181-4478-8633-971c04b7ae11
-
multi-img1 of 2
Google News Preferred Icon

'மிமி' தமிழ் மறுபதிப்பில் கீர்த்தி

அண்மையில் இந்தியில் வெளியீடு கண்ட 'மிமி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ஓடிடி'யில் வெளியீடு கண்ட இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

கீர்த்தி சனோன் நாயகியாக நடித்த இப்படம், மராத்தியில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியீடு கண்ட 'மலா அய் ஹய்ச்சி' படத்தின் மறுபதிப்பாகும்.

இந்நிலையில் 'மிமி' படத்தை தமிழிலும் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்ய உள்ளனர். இரு மொழிகளிலும் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க தயாரிப்புத்தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தகவல்.

இப்படத்தின் கதை தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதாக கீர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே, படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டுப் பாடி வாழ்த்திய சிம்பு, தனுஷ்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் நிகழ் வில் சிம்புவும் தனுஷும் கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

மேலும், இருவரும் அந்த விருந்து நிகழ் வில் ஒரு பாடலைப் பாடிய தும் அங்கிருந்த வர்களை உற்சாகப்படுத்தியது.

தனுஷ் 'மாரி-2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடலையும் சிம்பு 'வல்லவன்' படத்தில் இடம்பெற்ற 'லூசு பெண்ணே' பாடலையும் பாடியபோது கைதட்டல் பலமாக இருந்தது. இருவரும் பாடும் காணொளிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பிறந்தநாள் நிகழ்வில் நடிகர்கள் அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தாங்கள் இருவரும் யுவனின் இசைக்கு தீவிர ரசிகர்கள் என்று மேடையில் பேசும்போது சிம்புவும் தனுஷும் குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்தார் யுவன்.

இது அவரது 42வது பிறந்தநாளாகும். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.