தெலுங்கில் மறுபதிப்பாகும் அஜித் படங்கள்

தெலுங்கில் மறுபதிப்பாகும் அஜித் படங்கள்

1 mins read
fc09f183-55b6-4f10-89e4-462ca310b2ce
'வேதாளம்' படத்தில் அஜித். -

அஜித், விஜய், சூர்யா, விஷால் என தமிழ் முன்­னணி நடி­கர்­களின் படங்­க­ளுக்கு தெலுங்­கி­லும் நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது.

பல தமிழ் படங்­கள் தெலுங்­கில் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு நல்ல வசூல் காண்­கின்­றன. சில படங்­கள் தெலுங்­கில் மறு­ப­திப்­பா­கின்­றன.

அண்­மை­யில் 'அசு­ரன்' படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்­பான 'நாரப்பா' வசூ­லில் அசத்­தி­யது.

இந்­நி­லை­யில், அஜித் நடித்­துள்ள படங்­களை தெலுங்­கில் மொழி­மாற்­றம் செய்­வ­தில் பல­ரும் ஆர்­வம் காட்டி வரு­கின்­றனர். அண்­மை­யில் அஜித் நடித்த 'நேர்­கொண்ட பார்வை' படம் 'வக்­கீல் சாப்' என்ற பெய­ரில் தெலுங்­கில் மறு­ப­திப்பு செய்­யப்­பட்டு பெரும் வர­வேற்­பைப் பெற்­றது.

இதை­ய­டுத்து, 'வேதா­ளம்', 'என்னை அறிந்­தால்' ஆகிய இரு படங்­க­ளை­யும் தெலுங்­கில் மறு­ப­திப்பு செய்து வரு­கின்­ற­னர்.

'வேதாளம்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பு குறித்த அறிவிப்பை நடிகர் சிரஞ்சீவி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இப்படத்துக்கு 'போலா ஷங்கர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.