மஞ்சிமா: உருவக்கேலி செய்யாதீர்

மஞ்சிமா: உருவக்கேலி செய்யாதீர்

3 mins read
e15deedf-44b5-4034-b753-c15d674149da
-

பதற்­றம், உடல் பரு­மன் பிரச்­சி­னை­க­ளால் தாம் கடு­மை­யாக அவ­திப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் மஞ்­சிமா மோகன்.

உரு­வக்­கே­லிக்கு ஆளான கால­கட்­டத்­தில் தாம் கடும் மன உளைச்­ச­லால் தவிக்க நேரிட்­ட­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

'அச்­சம் என்­பது மட­மை­யடா' படத்­தில் சிம்­பு­வுக்கு ஜோடி­யாக நடித்த மஞ்­சி­மா­வுக்­குப் பின்­னர் நல்ல வாய்ப்­பு­கள் அமைந்­தன. அவற்­றில் நடித்து வந்த நிலை­யில், 2019ஆம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. அதன்பிறகு சில மாதங்­கள் ஓய்­வெ­டுத்­த­தால் தமது உடல் எடை அதி­க­ரித்­த­தா­கச் சொல்­கி­றார் மஞ்­சிமா. அதன்பிற­கு­தான் கேலி, கிண்­டல்­க­ளுக்கு ஆளா­ன­தா­க­வும் சொல்­கி­றார்.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு 'துக்­ளக் தர்­பார்', 'எஃப்.ஐ.ஆர்' என இரண்டு படங்­களில் நடித்­தி­ருப்­ப­வர், பிற­ரைக் கிண்­டல் செய்­வ­தற்கு முன் ஒரு­மு­றைக்கு இரு­முறை யோசிக்கவேண்­டும் என்­கி­றார். அதி­லும், நடி­கை­கள் என்று வரும்­போது சிலர் எல்லை மீறி விமர்­சிப்­ப­தாக வருத்­தப்­ப­டு­கி­றார்.

"உடல், மன­ந­லப் பிரச்­சி­னை­களை நாங்­களும் எதிர்­கொள்­வோம். ஆனால் எங்­களை மட்­டும் ஒரு­த­ரப்­பி­னர் அதி­கம் கிண்­டல் செய்­கி­றார்­கள். அதற்­கான கார­ணம் என்ன என்­பது எனக்­குப் புரி­ய­வில்லை.

"காலில் நடந்த அறுவை சிகிச்­சைக்­குப் பிறகு 'ஃபிசியோ­தெ­ரபி', யோகா­ச­னத்­தில் கவ­னம் செலுத்­தி­னேன். உடல் எடையை எப்­படி குறைப்­பது என்­பது குறித்து ஊட்­டச்­சத்து நிபு­ணர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து அதன்­படி நடந்­து­கொண்­டேன்.

"இடைப்­பட்ட நேரத்­தில் சில நிகழ்ச்­சி­க­ளுக்­குச் சென்­ற­போது, என்­னைப் பார்த்த அனை­வ­ருமே உடல் பரு­மன் குறித்து மட்­டும்­தான் அதி­கம் கேட்­ட­னர். இப்­படி ஆகி­விட்­டதே என சிலர் துக்­கம் விசா­ரித்­த­னர்.இதுவே என் மன உளைச்­ச­லுக்கு கார­ண­மா­கி­விட்­டது," என்­கி­றார் மஞ்­சிமா.

இன்று கொரோ­னா­வு­டன் வாழ உலக மக்­கள் கற்­றுக்­கொள்­வது போல் உடல் பரு­ம­னு­டன் வாழ தானும் முடிவு செய்­த­தா­கச் சொல்­ப­வர், கதா­நா­ய­கி­கள் குண்­டாக இருந்­தால் நடிக்­கக் கூடாது என்று எந்த விதி­மு­றை­யும் திரை­யு­ல­கில் இல்லை என்று சற்று கோபத்­து­டன் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"பெரும்­பா­லும் இயக்­கு­நர்­களோ, உடன் நடிப்­ப­வர்­க­ளோ­கூட எது­வும் கேட்­ப­தில்லை. மற்­ற­வர்­கள்­தான் நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் கிண்­டல் செய்­கி­றார்­கள். இப்­ப­டிப்­பட்ட பேச்­சு­கள் என்­னைப் பாதிக்­காது என்று மன­த­ள­வில் நானே சமா­தா­னம் சொல்­லிக்­கொள்­வேன். அதே­ச­ம­யம், வணி­கப் படங்­களில் நடிக்­கும்­போது அவற்­றில் எனக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு ஏற்ப நான் இருக்க வேண்­டும். அத­னால்­தான் மருத்­துவ ஆலோ­ச­னை­களைத் தொடர்ந்து பெற்று வரு­கி­றேன்.

"மேலும், இது என் உடல்­ந­லம் சம்­பந்­தப்­பட்ட விஷ­ய­மும் கூட," என்று சொல்­லும் மஞ்­சிமா மோகன், தற்­போ­தைய வாழ்க்­கை­முறை கார­ண­மாக குழந்­தை­களும்­கூட உடல் பரு­ம­னால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக வருத்­தப்­ப­டு­கி­றார்.

உடல், மன நலன்­களை முன்­னி­றுத்­திச் சாப்­பிட வேண்­டும் என்­பதை மறந்து அழ­குக்­காக சாப்­பிட வேண்­டும் என்ற எண்­ணத்தை குழந்­தை­க­ளின் மன­தில் பதிய வைத்­து­விட்­டோம் என்­பது கவலை அளிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

உரு­வக் கேலிக்கு ஆளா­னதை அடுத்து கடும் மனப்­ப­தற்­றத்­துக்­கும் ஆளா­னதா­கச் சொல்­லும் மஞ்­சிமா, அதில் இருந்து மீண்டு வர சிர­மப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"மற்­ற­வர்­க­ளுக்கு எல்­லாமே நல்­ல­வி­த­மாக நடப்­ப­தா­க­வும் என் வாழ்க்­கை­யில் மட்­டும் அனைத்­தும் தவ­றாக நடப்­ப­தா­க­வும் நினைக்­கத் தோன்­றும். இத­னால் மன­தில் பெரும் அவ­நம்­பிக்­கை­யும் விரக்­தி­யும் ஏற்­படும். பல நாள்­களை இந்த மன­நி­லை­யு­டன் கழித்­தி­ருக்­கி­றேன்.

"நல்ல வேளை­யாக, சரி­யான மனி­தர்­களை சரி­யான நேரத்­தில் சந்­தித்­த­தால் இன்று உங்­க­ளு­டன் இயல்­பா­கப் பேச முடி­கிறது. இல்­லை­யெ­னில் கேலி, கிண்­டல்­க­ளால் வெற்­றி­கொள்­ளப்­பட்டு நான் காணா­மல் போயி­ருப்­பேன்.

"உரு­வக்­கேலி செய்­ப­வர்­கள், அந்த இடத்­தில் தங்­களை வைத்து யோசித்­துப் பார்க்கவேண்­டும். தங்­க­ளுக்கு இப்­படி­யொரு நிலைமை ஏற்­பட்­டால் என்ன செய்­வார்­கள் என்று நினைத்­தால் யாரை­யும் கிண்­டல் செய்ய தோன்­றாது," என்கி றார் மஞ்சிமா.