நடுங்கும் குளிரில் சலிக்காமல் நடித்த சிருஷ்டி

நடுங்கும் குளிரில் சலிக்காமல் நடித்த சிருஷ்டி

1 mins read
c3299e0a-472c-4aed-8d6a-f433fe1120a5
'தி ஜர்னி ஆஃப் பெட்' படத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே. -

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ளது 'தி ஜர்னி ஆஃப் பெட்'.

மணி­பா­ரதி இயக்­கி­ உள்­ளார்.

சிருஷ்டி டாங்கே நாய­கி­யாக நடிக்க, ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி­பி­ரியா, மலை­யாள நடிகை திவ்யா, ரிஷா, 'டிக்­டாக்' திருச்சி சாதனா, சுண்­ணாம்பு செந்­தில் உள்­ளிட்ட பலர் நடித்துள்­ளனர்.

கதைப்­படி, ஸ்ரீகாந்த் தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் பணி­யாற்­றும் இளை­யர். தன் நண்­பர்­க­ளு­டன் ஊட்­டிக்கு சுற்­றுலா செல்­வார். அப்­போது எதிர்­பா­ராத வித­மாக நிக­ழும் கொலை அந்த இளை­யர் குழு­வுக்­கும் கடும் அதிர்ச்சி அளிக்­கிறது. அதன்பின்­னர் அந்த நண்­பர்­கள் எதிர்­கொள்­ளும் சிக்­கல்­களும் ஆபத்­து­க­ளும்­தான் கதை.

"சுருக்­க­மா­கச் சொன்­னால் ஒரு விஷ­யத்தை குருட்­டாம்­போக்­கில் அணு­கி­னால் அது மேலும் நம்மை சிக்­க­லில் கொண்­டு­போய்விடும் என்­பதை மையப்­ப­டுத்தி இந்த கதையை உரு­வாக்­கி­யுள்­ளோம். ஊட்டி­யைச் சுற்றி உள்ள வனப்­பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 35 நாள்­கள் படப்­பி­டிப்பு நடத்­தி­யுள்­ளோம்.

"சிருஷ்டி டாங்கே இது­வரை நடித்­தி­ராத ஒரு வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். நடுங்க வைக்­கும் குளி­ரில் அவர் தனித்து நடிக்கவேண்­டிய காட்சி­களைப் பட­மாக்­கி­னோம். கொஞ்­சம் கூட சலித்­துக்கொள்­ளா­மல் நடித்­தார். ஊட்­டி­யில் மழை பெய்­தால், குளிர் அடித்­தால் எப்­படி இருக்­கும் என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். ஒரே சம­யத்­தில் இரண்­டும் இருந்­தால் சமா­ளிக்க இய­லாது. ஆனால் அப்­ப­டிப்­பட்ட சூழ­லில்­தான் காட்சி­களைப் பட­மாக்­கி­னோம்," என்­கிறார் இயக்­கு­நர் மணி­பா­ரதி.