இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் 71வது படமாக உருவாகிறது 'நான் கடவுள் இல்லை'.
இதில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கிறார். இனியா, சாக்ஷி அகர்வால் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனிக்கு இதில் நேர்மையான காவல்துறை அதிகாரி வேடம். வழக்கம்போல் மிக கச்சிதமாக தனது கதாபாத்திரத்துடன் பொருந்தி நடித்துள்ளதாகப் பாராட்டுகிறார் எஸ்ஏசி.
தாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் துறை சார்ந்த அழுத்தங்களையும் எப்படி சமாளித்து கடமையாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி மனைவியாக இனியா நடித்துள்ளார்.