எனது ஆருயிர் நண்பன் சிம்புவின் திருமணத்திற்குப் பிறகுதான் எனது திருமணம் நடக்கும் என வெட்கத்துடன் கூறியுள்ளார் நடிகர் ஜெய்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் ஜெய்.
அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தான் விஜய் யுடன் இணைந்து நடிக்க இதுவரை 150 முறை வாய்ப்பு கேட்டுவிட்டதாகவும் சொல்கிறார்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "பகவதி' படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான தருணம். அதன்பிறகும் அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னை விடாமல் துரத்தியது. அதற்காக அவரிடம் இதுவரை 150 முறை வாய்ப்பு கேட்டிருப்பேன்.
"ஆனால், அவரோ, "நீயே ஒரு பெரிய நாயகனாகி விட்டாய். அப்புறம் ஏன் என்னுடன் நடிக்க ஆசைப்படுகிறாய்?" என்று சொல்லிவிட்டார் என வருத்தத்துடன் பேசிய ெஜய்யிடம் "உங்கள் திருமணம் எப்போது," என செய்தியாளர்கள் கேட்டனர்.
"சிம்பு திருமணத்திற்குப் பிறகுதான் நான் திருமணம் செய்துகொள்வேன். அனேகமாக சிம்புவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்து விடும் என நினைக்கிறேன்," என்ற ரகசியத்தைப் போட்டுடைத்தார்.
ஜெய் தற்போது, 'பிரேக்கிங் நியூஸ்', 'பார்ட்டி', 'எண்ணித்துணிக', 'சிவ சிவா', குற்றமே குற்றம்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு பெயரிடப்படாத படம் ஒன்றில் சுந்தர் சி-க்கு வில்லனாகவும் நடித்துவருகிறார். சிம்புவின் திருமணச் செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

