திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
dfcae5b0-7889-43d4-9b8b-0b7c3ab29d2f
-
multi-img1 of 2

முதல் தோற்றச் சுவரொட்டி வெளியீடு

'அண்ணாத்த' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் இந்தச் சுவரொட்டி சமூக வலைத் தளங்களில் ஏராளமான ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டது.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் தொழில்நுட்பப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தனக்கான வசனங்களுக்கு ரஜினி பின்னணிக்குரல் கொடுத்துவிட்டார்.

40 வயது பெண்ணாக அனுஷ்கா

'சைலன்ஸ்' படத்தை அடுத்து அனுஷ்கா நடிக்கும் புதுப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கிறது.

மீண்டும் சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

25 வயது இளையருக்கும் 40 வயது பெண்மணிக்கும் இடையேயான காதல்தான் கதைக்களமாம். முழுக் கதையும் கேட்ட பிறகு இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த ஆண்டு கால்ஷீட் ஒதுக்க முடியாது என்றும் புத்தாண்டில் பட வேலைகளைத் துவங்கினால் தாம் நடிக்கத் தயார் என்றும் அனுஷ்கா நிபந்தனை விதித்ததாக தகவல்.

தயாரிப்புத் தரப்பு இதை ஏற்றுக்கொண்டதை அடுத்து படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அனுஷ்கா வழக்கத்தைவிட குறைவான சம்பளத்துக்கே நடிக்கிறாராம்.