இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதுப் படத்துக்கு 'யானை' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதையடுத்து தலைப்புடன் கூடிய முதல்தோற்றச் சுவரொட்டியும் வெளியாகியுள்ளது.
'ஏவி 33' எனக் குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்தின் பணிகள் கடந்த சில தினங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், ராதிகா, அம்மு அபிராமி ஆகியோரும் உள்ளனர்.
அருண் விஜய் ஏற்றுள்ள கதாபாத்திரமும் அதற்கான அவரது நடிப்பும் மிரள வைக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

