'மகான்' படத்தில் துருவ் விக்ரம் 'தாதா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்தப்பாத்திரத்துக்கான தோற்றத்துடன் அவர் காட்சிஅளிக்கும் சுவரொட்டியையும் காணொளிப்பதிவு ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
துருவ் கம்பீரமாக காட்சி அளிப்பதாகவும் அவரது கதாபாத்திரம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் ரசிகர்கள் பின்னூட்டமிட்டுள்ளனர்.
'மகான்' படத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் இருவரும் நாயகன், வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம்தான் வில்லன் என்று ஆரூடத்தகவல் ஒன்று வலம் வருகிறது.

