'விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டியுள்ளது'

'விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டியுள்ளது'

1 mins read
7a04249e-1b95-4cb4-af3f-f072c135a20d
நிகழ்ச்சி ஒன்றில் விவேக்குடன் வடிவேலு. -

கொரோனா காலகட்டத்தில் தாம் நடித்த நகைச்சுவை காட்சிகள் மன அழுத்தத்தில் இருந்து பலர் விடுபட கைகொடுத்ததாகச் சொல்கிறார் வடிவேலு.

நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு திரையுலகில் முடிவு என்பதே இல்லை என்றார்.

நான்கு புதுப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்றும் வடிவேலு கூறினார்.

"நான் கால்வைத்த இடங்களில் எல்லாம் கன்னி வெடிகளை பதுக்கி வைத்தனர். அவற்றில் இருந்து தப்பித்துவிட்டேன். இனி இயக்குநர் சங்கர் படத்திலும் வரலாற்று கதைக்களத்தைக் கொண்ட படங்களிலும் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன்.

"எனக்கு வாய்ப்பு கொடுத்த தயா­ரிப்­பா­ளர் சுபாஷ் கரண், இப்­போது சபாஷ் கர­ணாக மாறி­விட்­டார். கட­வு­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் தமி­ழக முதல்­வர் ஸ்டா­லி­னுக்­கும் என் நன்றி," என்­றார் வடி­வேலு.

காலஞ்­சென்ற விவேக் தனக்கு நெருக்­க­மான நண்­பர் என்­றும் விவேக்­கின் இழப்பு மறக்க முடி­யாத மிகப்­பெ­ரும் வேதனை என்­றும் கண்­க­லங்க குறிப்­பிட்­டார் வடி­வேலு.

தாம் நடித்து வரும் புதுப்­ப­டத்­துக்கு 'நாய் சேகர்' என்ற தலைப்பு நிச்­ச­யம் கிடைக்­கும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். இப்­ப­டத்­தில் வடி­வேலு ஒரு பாட­லைப் பாட உள்­ளா­ராம்.

"விவேக் விட்­டுச் சென்ற இடத்­தை­யும் நிரப்ப வேண்­டிய சூழ்­நி­லை­யில் இருக்­கி­றேன். மீண்­டும் நடிக்க இருப்­ப­தைக் கேள்­விப்­பட்டு லாரன்ஸ், சிவ­கார்த்­தி­கே­யன், அர்­ஜுன் எனப் பலர் வாழ்த்து தெரி­வித்­த­னர்," என்று உற்­சா­கத்­து­டன் கூறி­னார் வடி­வேலு.

, :   