துப்பறியும் நிபுணர் கௌதம்

துப்பறியும் நிபுணர் கௌதம்

3 mins read
0789516f-df5a-4323-a136-d693e7ae4d1b
-

இயக்­கு­நர் எழில் என்­ற­வு­டன் அவ­ரது இயக்­கத்­தில் உரு­வான நகைச்­சு­வைப் படங்­கள் தான் சட்­டென நினை­வுக்கு வரும். இந்­நிலை­யில் அவ­ரது அடுத்த படத்­தின் தலைப்பு 'யுத்த சத்­தம்' என்று அறி­விக்­கப்­பட்­ட­போது கோடம்­பாக்­கத்­தில் பல­ருக்கும் ஆச்­ச­ரி­யம்.

கௌதம் கார்த்­திக், பார்த்­தி­பன் இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். இம்­முறை நகைச்­சுவை மட்­டு­மல்­லா­மல், இதர பொழு­து­போக்கு அம்­சங்­களுக்கும் இடம் தந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் எழில்.

கௌதம் கார்த்­திக் போன்ற துள்­ள­லும் துடிப்­பு­மான இளை­யர்­கள் நாய­க­னாக அமைந்­தால் எத்­த­கைய சவா­லான கதை­யை­யும் பட­மாக்­கி­விட இய­லும் என்று பாராட்­டு­ப­வர், தமது குரு­நா­த­ரான பார்த்­தி­பன் தமக்­காக முழு உழைப்­பை­யும் தந்­தி­ருப்­பதா­கச் சொல்­கி­றார்.

நாவ­லா­சி­ரி­யர் ராஜேஷ்­கு­மார் எழு­திய கதை­தான் இப்­போது எழில் இயக்­கத்­தில் பட­மா­கிறது. நாவ­லும் 'யுத்த சத்­தம்' என்ற தலைப்பில்தான் வெளி­யா­னது.

ஒரு கொலைச் சம்­ப­வத்­தால் தமி­ழ­கத்­தில் பர­ப­ரப்பு நில­வு­கிறது. அது தொடர்­பான உண்மை­க­ளைக் கண்­டு­பி­டிக்க காவல்­துறை அதி­கா­ரி­யான பார்த்தி­ப­னும் தனி­யார் துப்­ப­றி­யும் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த கௌதம் கார்த்­திக்­கும் கள­மி­றங்­குகின்ற­னர். அதன் பிறகு என்ன நடக்­கிறது என்­ப­து­தான் கதை­யாம்.

கொலை நடக்­கிற தரு­ணங்­கள் ஒரு மெல்­லிய கோடு மாதி­ரி­தான் என்று குறிப்­பி­டும் எழில், ஒரு தரு­ணம், ஒரு பொழுது, ஒரு சின்­னக் கோபம் நம்மை வேறொரு எல்­லைக்­குக் கொண்டு போய்­வி­டும் என்­கி­றார்.

இந்­தப் பட­மும் அப்­ப­டி­யொரு கொலை­யைக் கையி­லெ­டுத்து அலசு­கிறது. அதில் உள்ள உண்மை, குற்­றச் சூழ்­நிலை உரு­வா­கிற விதம் ஆகி­யவை ரசி­கர்­களை இருக்­கை­யின் நுனிக்கு கொண்டு வரும் என இப்­போதே உத்­த­ர­வா­தம் வழங்­கு­கி­றார் இயக்­கு­நர் எழில்.

"கௌதம் கார்த்­திக்­கைப் பொறுத்­த­வரை, நாம் ஒரு விஷ­யத்தை தெளி­வாக விளக்­கிச் சொன்­னால், அதுவே போது­மா­னது. அதன் பிறகு அந்­தக் காட்­சியை தனக்­கேற்ப மெரு­கேற்றி, முடி­வில் அது சுவா­ர­சி­ய­மாக அமை­யும்­படி பார்த்­துக்கொள்­வார்.

"கொஞ்­சம் கூட சலித்­துக்கொள்­ளா­மல் படப்­பி­டிப்­பின்­போது அவர் கொடுத்த ஒத்­து­ழைப்பு பாராட்­டுக்­கு­ரி­யது. அவ­ரைப் போன்ற துடிப்­பான இளம் நடி­கர்­களை வைத்து பல வெற்­றிப் படங்­க­ளைத் தர முடி­யும்.

"பார்த்­தி­பன் என்­னு­டைய குரு­நா­தர். அவரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை. கோவா திரைப்­பட விழா­வில் பங்­கேற்­கச் சென்­றி­ருந்­த­போது அவரைச் சந்­திக்க நேரிட்­டது. 'என்னை வைத்து எப்­போது படம் எடுக்­கப் போகி­றாய்' என்று அவரே நேர­டி­யா­கக் கேட்­டு­விட்­டார். அதன்பிறகு 'யுத்த சத்­தம்' வேக­மாக வள­ரத் தொடங்­கி­யது," என்­கி­றார் எழில்.

பார்த்­தி­ப­னி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பல நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடிந்­த­தாகச் சொல்­ப­வர், தன் உத­வி­யா­ளர்­க­ளி­டம் பார்த்­தி­பன் ஒரு நண்­ப­ரைப் போல் பேசிப் பழ­கு­வார் என்­கி­றார். பார்த்­தி­ப­னின் அனு­ப­வம் தனது படத்­துக்­குக் கூடு­தல் பலம் என்று குறிப்­பி­டும் எழில், அந்த அனு­ப­வத்­து­டன் கௌதம் கார்த்­திக் இள­மை­யும் இணைந்­தி­ருப்­பது ஆகச் சிறந்த கூட்­டணி என்­கி­றார்.

இப்­ப­டத்­தின் முதல் பாதி முழு­வ­தும் பல்­வேறு முடிச்­சு­கள் விழு­மாம். அடுத்த பாதி­யில் ஒவ்­வொரு முடிச்­சும் அவி­ழும் என்­றும் அந்­தக் காட்­சி­கள் திகி­லூட்­டு­ப­வை­யாக இருக்­கும் என்­றும் சொல்­கி­றார்.

"சிறந்த நாவல்­க­ளைப் பட­மாக்­கும்­போது ஓர் இயக்­கு­ந­ராக என் பணி எளி­தா­கிறது. அத்­த­கைய நாவல்­க­ளைப் படிக்­கும்­போதே திரைப்­ப­டக் காட்­சி­க­ளாக மன­தில் ஓடத்­தொடங்­கு­கிறது. அங்­கும் இங்­கு­மாக சில சிறிய மாற்­றங்­க­ளைச் செய்­தால், அதுவே போது­மா­னது. முழுக் கதை, திரைக்­கதை தயா­ரா­கி­வி­டும்.

"இது­போன்ற நாவல்­கள் நல்ல சினிமா படைப்­பு­களைக் கொடுக்­கும் ஆர்­வத்தை தூண்டு­கின்­றன. நாவ­லில் சொல்­லப்­பட்ட கதையை காட்­சிப்­ப­டுத்த சிறு மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். அதற்­கான காரணத்தைப் புரிந்துகொள்­ளும் எழுத்­தா­ளர்­கள் கிடைத்­தால் நல்­லது. ராஜேஷ்­கு­மார் பெரிய எழுத்­தா­ளர் என்­றா­லும், இவ்­வி­ஷ­யத்­தில் உத­வி­க­ர­மாக இருந்­தார்.

"இந்­தப் படம் கௌதம் கார்த்­தி­யின் வெற்றிப் படங்­களில் ஒன்­றாக அமை­யும். படம் விரை­வில் வெளி­யீடு காணும்," என்­கி­றார் இயக்­கு­நர் எழில்.

கௌதம் கார்த்திக்

, :   