தீபாவளிப் போட்டியில் இணைந்தது ‘மாநாடு’

தீபா­வளிப் பண்­டி­கை­யை­யொட்டி 'அண்­ணாத்த', 'வலிமை' ஆகிய இரு படங்­களும் திரை காண்­பது உறு­தி­யா­கி­விட்­டது.

ரஜினி, அஜித் ஆகிய இரு முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­களும் சினிமா ரசி­கர்­களை மீண்­டும் திரை­ய­ரங்­கு­க­ளுக்கு முழு வீச்­சில் வர­வ­ழைக்­கும் என கோடம்­பாக்­கத்­தில் பெரும் எதிர்­பார்ப்பு நில­வு­கிறது.

இந்­நி­லை­யில் சிம்பு நடிப்­பில் உரு­வாகி உள்ள 'மாநாடு' திரைப்­ப­ட­மும் தீபா­வளி ஓட்­டப்பந்­த­யத்­தில் இ்ணைவ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் சிம்பு, கல்­யாணி பிரி­ய­தர்­ஷன், பிரேம்ஜி, கரு­ணா­க­ரன் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர். மிக விரை­வில் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யா­கிறது.

இந்­நி­லை­யில் தயா­ரிப்­புத் தரப்­புக்கு சிறு சங்­க­டம் ஏற்­பட்­டுள்­ளது. ஒரே சம­யத்­தில் பல முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­கள் வெளி­யீடு கண்­டால் தங்­க­ளு­டைய வரு­வாய் பாதிக்­கப்­படும் என்று திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் தொடர்ந்து கூறி வரு­கின்­ற­னர்.

அதி­லும் கொரோனா நெருக்கடி­யால் கடும் வரு­வாய் இழப்பை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில், ஒரே சம­யத்­தில் இரண்டு முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­களை மட்­டுமே வெளி­யி­டு­வது நல்­லது என்­றும் கூறி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தீபா­வ­ளி­யன்று 'மாநாடு' திரைப்­ப­டம் வெளி­யி­டப்­படும் என்று தனது டுவிட்­டர் பக்­கத்­தில் அதன் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி அறி­வித்­துள்­ளார்.

"நிறை­வான மகிழ்­வுடன் 'மாநாடு' படத்தை தீபா­வ­ளி­யன்று வெளி­யி­டு­கி­றோம். படம் உங்­கள் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யும்.

"இத்­தனை நாள்­கள் பேரன்­போடு இப்படத்தின் வெளியீட்டுக் காக காத்திருந்த அனை­வ­ருக்­கும் நன்­றி­. உங்­கள் ஆத­ர­வோடு வரு­கி­றோம். வெல்­வோம்," என்று சுரேஷ் காமாட்சி தெரி­வித்­துள்­ளார்.

ரஜினி, அஜித் ரசி­கர்­களை அடுத்து சிம்பு ரசி­கர்­களும் தீபா­வளி கொண்­டாட்­டத்­துக்­குத் தயா­ராகி வரு­கி­றார்­கள். படத்தைப் பார்த்த சிம்பு, இயக்குநரை வெகு வாகப் பாராட்டியதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!