தமிழில் 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
மேலும், சேகர் கம்முலா இயக்கும் நேரடிப் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்தப் படம் தமிழ், இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் மற்றொரு நேரடி தெலுங்குப் படத்திலும் தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், தெலுங்கு தேசத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மகேஷ் பூபதியும் தன் படத்தில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் தனுஷை நேரில் சந்தித்து இவர் சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போனதாகத் தகவல். மிக விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.
, : .

