சாக்‌ஷி: இதுவரை இலக்குகள் ஏதுமில்லை

3 mins read
4a682100-d9a0-4464-a899-c003119f4928
-

சமூக வலைத்­த­ளங்­கள், ரியா­லிட்டி நிகழ்ச்சி, திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பு­கள் என எப்­போ­துமே பர­ப­ரப்­பாக வலம் வரு­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

தற்­போது 'தி நைட்' என்ற திகில் படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். இது விலங்­கு­கள் சம்­பந்­தப்­பட்ட கதைக்­களத்­து­டன் உரு­வாகி உள்­ள­தாம்.

தமி­ழில் இது­போன்ற படங்­கள் வந்­த­தில்லை என்­ப­தால் தேடி வந்த வாய்ப்பை உடனே ஏற்­றுக்கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

எனி­னும் படப்­பி­டிப்­பின்­போது பல சவால்­களைச் சந்­திக்க நேர்ந்­த­தாம். முக்­கிய காட்­சி­களை வனப்­ப­கு­தி­யில் பட­மாக்கி உள்­ள­னர்.

அதனால் தின­மும் அட்டை, வண்­டு­கள், பூச்­சிக்­க­டி­கள் என ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் சிர­மங்­களைச் சகித்­துக் கொண்டு உழைத்­துள்­ள­னர்.

"பூச்­சிக் கடி­களால் ஏற்­பட்ட காயங்­கள் ஆறி­விட்­டா­லும் தழும்­பு­கள் இன்­னும் உள்­ளன. இயக்­கு­நர் ரங்கா புவ­னேஷ்­வர் திடீ­ரென ஒரு­நாள் தொலை­பே­சி­யில் தொடர்புகொண்டு பேசி கதையை விவ­ரித்­தார்.

"ஓநாய் ஒன்றை நடிக்க வைக்க இருப்­ப­தா­க­வும் கதைப்­படி அது­வும் ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ரம் என்­றும் அவர் சொன்­ன­போது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. இதைக் கேட்ட அடுத்த நிமி­டமே நடிக்க ஒப்­புக்­கொண்­டேன்.

"கிட்­டத்­தட்ட நாய­கியை மையப்­படுத்­தும் கதை­தான். மொத்த பளு­வும் நாய­கி­யின் தோளில்­தான் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எனது கதா­பாத்­தி­ரம் மிக­வும் சவால் நிறைந்­தது என்­ப­தால் அதி­கம் உழைத்­தி­ருக்­கி­றேன்.

"காட்­டுப் பகு­தி­யில் தடுக்கி விழுந்­தால் சிறு குட்­டை­கள், குளங்­கள்­தான் காணப்­பட்­டன. எனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக ஆழம் தெரி­யாத குளங்­களில் இறங்கி நடித்­த­தும் படக்­கு­ழு­வி­ன­ரின் கடும் உழைப்­பும் படத்­தின் மீதான நம்­பிக்­கையை அதி­க­மாக்கி உள்­ளது," என்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

தின­மும் காலையில தங்­கும் விடு­தி­யில் இருந்து படப்­பிடிப்பு நடை­பெற்ற வனப்­ப­கு­திக்கு நடந்­து­தான் போகவேண்­டு­மாம். வாக­னங்­கள் செல்ல சாலை வசதி கிடை­யாது. எனவே அதி­காலை எழுந்து, ஒப்­பனை போட்­டுக்­கொண்டு கிளம்­பி­னால் இரவு பத்து மணிக்­குத்­தான் திரும்ப முடி­யும். இரவு ஏழு மணிக்கு மேல் உயி­ருக்கு உத்­த­ர­வா­தம் இல்லை என்­கி­றார்.

"நான் எதை­யும் மிகைப்­ப­டுத்­திக் கூற­வில்லை. இது­தான் உண்மை. இரவு எந்த விலங்கு குறுக்­கி­டும், நம்­மைத் தாக்­கும் என்று தெரி­யாது.

"எனி­னும் படம் சிறப்­பாக உரு­வாகி இருப்­ப­தாக இயக்­கு­நர் சொன்­ன­போது அந்­தக் கடி­ன­மான பொழுது­களில் நாம் கடு­மை­யாக உழைத்­தது வீண்­போ­க­வில்லை என்ற நிம்­ம­தி­யும் மன நிறை­வும் ஏற்­ப­டு­கிறது," என்று சொல்­லும் சாக்‌ஷி, அடுத்து பிர­பு­தே­வா­வு­டன் 'பகீரா', எஸ்.ஏ.சந்­தி­ர­சே­க­ரின் 'நான் கட­வுள் இல்லை', சுந்­தர்.சி.யின் 'அரண்­மனை 3' ஆகிய படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார்.

இவர் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி சுமார் ஒன்­பது ஆண்­டு­கள் ஆகின்­றன. இது­வரை தமக்­கென எந்­த­வி­த­மான இலக்­கு­க­ளை­யும் நிர்­ண­யிக்­க­வில்லை என்­ப­வர், வாழ்க்­கை­யில் எதிர்­கொள்­ளும் ஒவ்­வொரு நாளும் ஏதா­வது ஒரு விஷ­யத்­தைக் கற்­றுக்கொண்­டால், உணர்ந்­தால், அது­வும் வளர்ச்­சிக்­கு­ரிய நாள்­தான் என்­கி­றார்.

"நமது வாழ்க்­கைப் பய­ணம் என்­பது கற்­ற­லுக்­கான தளம். 'தி நைட்' படத்­தில் உணர்­வு­பூர்­வ­மான ஒரு காட்­சி­யில் அனா­யாச­மாக ஒரே டேக்­கில் நடித்து முடித்­தேன். ஒன்­பது ஆண்­டு­கால அனு­ப­வம்­தான் இதற்­குக் கார­ணம்.

"வெற்றி, தோல்வி என்­பது அவ­ர­வர் பார்­வை­யில் மாறு­படும்.

"ஒவ்­வொரு படத்­தி­லும் எனக்­குள் சில மாற்­றங்­கள் நிகழ்­வதை உணர முடி­கிறது," என்று சொல்­ப­வர், நடி­கர் தனு­ஷின் வளர்ச்சி தம்மை பிர­மிக்க வைப்­ப­தா­கக் கூறு­கி­றார்.