காளிங்கன் இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் நடிப்பில் உருவாகும் புதுப்படம் 'பகவான்'. இதில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் ஆரி. அவரது இணையாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். "படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைக்கும். ரசிகர்களை மிரள வைக்கும் நோக்கத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட்டை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். இவர் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்திலும் நடித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்கிறார் இயக்குநர். அநேகமாக தீபாவளியையொட்டி படம் வெளியாகக்கூடும்.
வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் ஆரி
1 mins read
-

