இந்தித் திரையுலகில் S$182 மில்லியன் முதலீடு

இந்தித் திரையுலகில் S$182 மில்லியன் முதலீடு

1 mins read

இந்­தி­யா­வின் இரு மிகப்­பெ­ரிய திரைப்­ப­டத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கிட்­டத்­தட்ட S$182 மில்­லி­யன் மதிப்­பி­லான திரைப்­ப­டத் தயா­ரிப்பு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

கொவிட்-19 ஏற்­ப­டுத்­திய மோச­மான பாதிப்­பி­லி­ருந்து படிப்­ப­டி­யாக மீண்டு நாடு முழு­வ­தும் திரை­யரங்­கு­கள் திறக்­கப்­பட்­டு­வ­ரும் வேளை­யில் அந்த ஒப்­பந்­தத்­தில் நிறு­வ­னங்­கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

அனில் அம்­பா­னி­யின் ரிலை­யன்ஸ் எண்­டர்­டெய்ன்­மண்ட், டி-சிரிஸ் ஆகிய அவ்­விரு நிறு­வ­னங்­கள் அடுத்த மூன்­றாண்­டு­களில் 10க்கும் மேற்­பட்ட திரைப்­ப­டங்­களை இணைந்து தயா­ரிக்க இணக்­கம் தெரி­வித்­துள்­ளன.

இவற்­றில் சில திரைப்­ப­டங்­கள் அடுத்த ஆண்­டு­வாக்­கில் வெளி­யி­டப்­ப­ட­லாம் என்று அந்­நி­று­வ­னங்­கள் கூறின.

இந்­திய திரைப்­ப­டத் தயா­ரிப்பு வர­லாற்­றில் இது­வரை செய்து கொள்­ளப்­பட்ட மிகப்­பெ­ரிய ஒப்­பந்­தங்­களில் இது­வும் அடங்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

பெருந்­தொற்­றுக் காலத்­தில், திரை­ய­ரங்­கு­களில் படங்­களை வெளி­யி­டு­வ­தைக் கைவிட்டு அமே­சான், நெட்­ஃபி­ளிக்ஸ் போன்ற 'ஓடிடி' தளங்­களை நோக்கி பல்­வேறு திரைப்­ப­டத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கவ­னத்­தைத் திருப்­பி­யுள்­ளன. இத்­த­கைய சூழ­லில், திரை­யரங்­கு­க­ளைத் தள­மா­கக் கொண்டு இவ்­வ­ளவு பெரிய ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டி­ருப்­பது துணிச்­ச­லான செயல் எனக் கூறப்­ப­டு­கிறது.