நந்தா பெரியசாமி: ஆனந்தம் விளையாடும் வீட்டின் கதை

‘ஆனந்­தம் விளை­யா­டும் வீடு’ என்ற அழ­கான தலைப்­பு­டன் கள­மி­றங்கி உள்­ளார் இயக்­கு­நர் நந்தா பெரி­ய­சாமி. கூட்­டுக் குடும்­பத்­தால் விளையும் நன்­மை­க­ளைக் கூற வரும் மற்­றொரு தமிழ் படம்.

இப்­ப­டத்­துக்­கான முதல் புள்ளி தன் குடும்­பத்­தில் இருந்­து­தான் தொடங்­கி­யது என்­கி­றார் நந்தா.

“அண்­ணன், தம்பி இரு­வ­ரும் நல்­ல­வர்­க­ளாக இருந்­தா­லும் நடு­வில் இருந்த சிலர் அவ்­வப்­போது கொம்பு சீவி, கடை­சி­யில் இரு­வருக்­கும் இடையே பிரச்­சி­னையை ஏற்­படுத்­தி­விட்­ட­னர். இப்­படி என்னுடைய அக்­கா­வின் கண­வ­ருக்­கும் அவ­ரு­டைய அண்­ண­னுக்­கும் இடையே ஏற்­பட்ட பிரச்­சி­னை­களை அடிப்­படை­யாக வைத்து, உண்­மைச் சம்­ப­வங்­க­ளின் கோர்­வை­யாக இந்தப் படம் உரு­வாகி உள்­ளது,” என்­கி­றார் நந்தா பெரி­ய­சாமி.

கௌதம் கார்த்­திக், சேரன் இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர். நட்­சத்­திர தம்­ப­தி­ய­ரான டாக்­டர் ராஜ­சே­கர், ஜீவி­தா­வின் மகள் ஷிவாத்­மிகா நாய­கி­யாக அறி­மு­க­மா­கி­றார். மேலும், பல மூத்த, அனு­பவ நடி­கர்­கள் என 35 ஐந்து கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் படம் கல­க­லப்­பா­க­வும் உணர்­வு­பூர்­வ­மா­கும் உரு­வாகி உள்­ளது இப்­ப­டம்.

“முக்­கி­ய­மான ஓர் இலக்கை நோக்கி கதை பய­ணப்­படும். அந்த இலக்கு என்ன என்­பது ரக­சி­யம். பிரிந்த உற­வு­களை இணைப்­ப­தற்­காக இரண்டு குடும்­பங்­கள் எத்­தகைய முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன. இறு­தி­யில் இலக்கை அடை­கி­றார்­களா என்­பதை எல்­லாம் திரு­வி­ழாக்­களில் தோர­ணங்­கள், வண்ண விளக்­கு­கள் கொண்டு அனைத்­தை­யும் அலங்­க­ரிப்­பது போல் ரசிக்­கும்­படி காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம்.

“கெள­தம் கார்த்­திக் எனக்கு கதா­நா­ய­க­னாக வாய்த்­தது எனது அதிர்ஷ்­டம். மூன்று மணி நேரம் நான் சொன்ன கதை­யைப் பொறு­மை­யா­கக் கேட்­டார். அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் சக்­தி­வேல். படிப்பை முடித்து, தன் சித்­தாப்­பா­வுக்கு துணை­யாக இருக்­கும் இளை­யர். வீட்­டுக்கு வெளியே பாயும் புலி என்­றால் பெரி­ய­வர்­கள் முன்பு பணிவு காட்­டு­வார்.

“கௌதமை இயக்­கு­நர்­க­ளின் குழந்தை என்­பேன். கார­ணம், இயக்­கு­நர் சொல்­வதை மட்­டுமே செய்­வார், அதை­யும் நூறு விழுக்­காடு சரி­யா­கச் செய்­வார். பார்க்க வெளி­நாட்­டுக்­கா­ரர் போன்று இருந்­தா­லும் தெள்­ளத் தெளி­வான உச்­ச­ரிப்­பு­டன் தமி­ழில் பேசு­கி­றார். அவ­ரு­டைய அர்ப்­ப­ணிப்பு அபா­ர­மா­னது.

“இயக்­கு­நர் சேர­ன் இப்­ப­டத்­தின் மற்­றொரு பலம். மொத்த கதை­யும் அவ­ரைச் சுற்­றித்­தான் நடக்­கும். கதை பிடித்த கார­ணத்­தால் மட்டுமே நடிக்க சம்­ம­தித்­தார்,” என்­கி­றார் நந்தா பெரி­ய­சாமி.

அறி­முக நாயகி என்­றா­லும் தயக்­கம் இன்றி நடிக்­கி­றா­ராம் ஷிவாத்­மிகா. நடி­கை­கள் ஷோபா, ஊர்­வசி, அஞ்­சலி, அபர்ணா பால­மு­ரளி வரிசை­யில் இவ­ருக்­கும் இடம் கிடைக்­கும் என்­பது நந்­தா­வின் கணிப்பு கலந்த பாராட்டு. ஆந்திரா­வில் வளர்ந்­த­வர் என்­றா­லும் ஷிவாத்­மிகா தமி­ழில் தெளி­வா­கப் பேசு­கிறார்.

“டேனியல் பாலா­ஜி­தான் இதில் வில்­லன். வச­னங்­களை முணு­முணுப்­பது போல்­தான் நமக்­குத் தோன்­றும். இது­கு­றித்து கேட்­டால் பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போது பார்த்­துக் கொள்­வோம் என்­பார். ஆனால் ‘டப்­பிங்’ பணி முடிந்தபிறகு காட்­சி­யைப் பார்த்­தால் கச்­சி­த­மாக இருக்­கும். அவ­ரது முக­பா­வ­னை­கள் எப்­போ­துமே மிரட்­டல்­தான்.

“சினே­கன், சர­வ­ணன், சௌந்­த­ர­ராஜா, நமோ நாரா­யணா, மொட்டை ராஜேந்­தி­ரன், மௌனிகா, மது­மிதா உட்­பட அனை­வ­ருக்­குமே மன­தில் நிற்­கும் பாத்­தி­ரங்­கள் அமைந்­துள்­ளன” என்­கி­றார் நந்தா.

, :   .

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!