‘இது சவாலான அனுபவம்’

நடிகை கங்­கனா ரணா­வத்­தின் உழைப்­பும் அர்ப்­ப­ணிப்­பும் பாராட்டுக்­கு­ரி­யவை என்­கி­றார் அர­விந்த்சாமி. இவ­ரும் கங்­க­னா­வும் நடித்­துள்ள ‘தலைவி’ படம் அண்­மை­யில் வெளி­யீடு கண்­டது.

அதில் எம்­ஜி­ஆர் கதா­பாத்­தி­ரத்­தில் அர­விந்த் சாமி­யும் ஜெய­லலி­தாஆ­வாக கங்­கனா ரணா­வத்­தும் நடித்­துள்­ள­னர். படத்­துக்கு கல­வை­யான விமர்­ச­னங்­கள் கிடைத்­துள்ள நிலை­யில், எம்­ஜி­ஆர் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தது சவா­லான அனு­ப­வ­மாக இருந்­தது என்­கி­றார் அர­விந்த்­சாமி.

“நான் சிறு வயது முதல் எம்­ஜி­ஆ­ரைப் பார்த்து வளர்ந்­த­வன். இத­னால் சில விஷ­யங்­களை என்­னால் சுய­மாக யோசித்து செய்ய முடிந்­தது. ஆனால் வட இந்­தி­யா­வில் பிறந்து வளர்ந்த கங்­க­னா­வுக்கு அப்­ப­டி­யல்ல. அவ­ருக்கு மொழி தெரி­யாது. தமிழகத் தலை­வர்­கள் குறித்­தும் அதி­கம் அறிந்­தி­ருக்க வாய்ப்பு இல்லை.

“இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில், ஜெய­ல­லி­தா­வாக திரை­யில் நடிக்க வேண்­டும் என்­றால் அவர் எந்த அள­வுக்கு தம்மை தயார்ப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை யோசித்­துப் பாருங்­கள். இப்­போது அவ­ரது நடிப்பு சிறப்­பாக இருந்­தது என பலர் பாராட்­டு­கி­றார்­கள் என்­றால், அவர் எந்த அள­வுக்கு தனது கதா­பாத்­தி­ரத்தை உள்­வாங்கி இருப்­பார் என யோசிக்­கி­றேன். கங்­க­னா­வின் சினிமா வாழ்க்­கை­யில் ‘தலைவி’ சிறந்த பரிசு என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மும் இல்லை,” என்­கி­றார் அர­விந்த்­சாமி.

எம்­ஜி­ஆ­ராக நடிக்க தானும் சில சவால்­களை சந்­திக்க வேண்டி இருந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இந்­தப் படத்­தில் நடிக்­க­லாமா வேண்­டாமா என்­பதை நன்கு யோசித்­து­தான் முடிவு செய்­துள்­ளார். இவ்­வாறான யோச­னை­யும் தயக்­க­மும் மன­தில் ஏற்­பட்­டாலே அந்­தப் படத்­தில் நடித்தே ஆவது என முடிவு செய்­து­வி­டு­வா­ராம்.

“எம்­ஜி­ஆர் கதா­பாத்­தி­ரம் சவா­லான ஒன்­றாக இருக்­கும் என்று மன­தில்­பட்­ட­தும் நடிப்­ப­தா­கச் சொல்­லி­விட்­டேன். எனி­னும் அடுத்த இரண்­டா­வது வாரத்­தில் படப்­பி­டிப்பு தொடங்­கும் என்­றார் இயக்­கு­நர். நான் தயங்­க­வில்லை. சிறு வய­தில் இருந்து பார்த்து வளர்ந்த ஒரு தலை­வ­ராக திரை­யில் தோன்­று­கி­றேன். அவர் உடல்­மொ­ழியை தேவை­யான இடங்­களில் வெளிப்­ப­டுத்த இய­லும் என நம்­பி­னேன்.

“மேலும், இதில் உணர்­வு­க­ளுக்­குத்­தான் அதிக முக்­கி­யத்­து­வம் இருந்­ததே தவிர, எம்ஜிஆரை அப்­ப­டியே பிர­தி­ப­லிக்க வேண்­டிய கட்­டா­யம் எழ­வில்லை. என்­னைப் பொறுத்­த­வரை எம்­ஜி­ஆர் வேடத்­தில் நடிப்­பதே சவால்­தான். அதைக் கடந்து வந்­தி­ருப்­ப­தில் நெகிழ்ச்சி. குறிப்­பாக, உயி­ரற்ற உட­லாக படுத்­தி­ருந்­த­போது மன­துக்­குள் ஓடிய உணர்­வு­கள் எனக்கு மட்­டுமே சொந்­த­மா­னவை. அவற்றை வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை,” என்­கி­றார் அரவிந்த்சாமி.

தமது இரு­பத்து ஐந்­தா­வது வய­தில், அச்சமயம் முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லி­தா­வி­டம் இருந்து கலை­மா­மணி விருது பெற்­ற­தாக நினைவுகூர்பவர், விரு­த­ளித்த பின்­னர், மேலும் பல விரு­து­க­ளைப் பெற வேண்­டும் என்று குறிப்­பிட்டு அவர் வாழ்த்தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

பின்­னர் சினி­மா­வி­ல் இ­ருந்து விலகி தொழில்­து­றை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, ஒரு தொழி­லதி­பராக மீண்­டும் ஜெய­ல­லி­தாவை சந்­திக்­கும் வாய்ப்பு அமைந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், ‘எதற்­காக சினி­மா­வில் நடிக்­கா­மல் வில­கிச் சென்­றீர்­கள். மீண்­டும் நடிக்க வாருங்­கள்’ என்று ஜெய­ல­லிதா தமக்கு அறி­வுரை கூறி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

ஒரு வகை­யில் ஜெய லலிதா அவ­ரது தாய்மைக குணத்தை வெளிப்­ப­டுத்தி­ய­தா­கத் தமக்கு தோன்­று­கிறது என்­றும் சொல்­கி­றார்.

திரைப்­பட இயக்­கு­ந­ராக சாதிக்க வேண்­டும் என்ற எண்­ணம் மன­தில் வலு­வாக பதிந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், சில கதை­களை தயார் நிலை­யில் வைத்­துள்­ளா­ராம்.

“அவற்­றுள் ஒன்று காதல் கதை. அதை இயக்­க ­வேண்­டும் என்­கிற திட்­டம் இருக்­கிறது. வாய்ப்­பும் சூழ்­நி­லை­யும் சரி­யாக அமைந்­தால் அந்­தக் கதை­யைத்­தான் முத­லில் பட மாக்குவேன்.

“கோபம் என் உடன் பிறந்த குணம் என­லாம். மிக எளி­தில் கோபப்­பட மாட்­டேன். அப்­படி வந்­து­விட்­டால் நிலைமை மோச­மா­கி­வி­டும். கோபத்­தால் நான் இழந்­தது அதி­கம். பெரும்­பா­லான மனி­தர்­கள் அப்­ப­டித்­தான் என்­றா­லும் அதை நாம் நியாயப்­படுத்­து­வது முறை­யல்ல. அதைத்­தான் நான் ‘ரவுத்­தி­ரம்’ படத்­தில் சொல்ல நினைத்­தேன். அது சிறப்­பாக வந்­தி­ருப்­ப­தாக பெரிய இயக்­கு­நர்­கள் பாராட்­டும்­போது மனநிறைவு ஏற்படுகிறது,” என்­கி­றார் அர­விந்த்­சாமி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!