திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
c55f6d79-b5d7-4a87-b062-e32da39b8272
-
multi-img1 of 2

'ரசிகையாக மாறி கதை கேட்கிறேன்'

பல மொழிகளில் நடித்து வந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் கதைகளை தேர்வு செய்வதில் வெவ்வேறு கொள்கைகளை தாம் பின்பற்றுவதில்லை என்கிறார் டாப்சி.

இவரது நடிப்பில் வெளியான கடைசி ஆறு படங்களும் வசூலில் அசத்தி உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அண்மைய பேட்டியில், பேய் படங்களில் நடிக்கக் கூடாது என்று தாம் முடிவெடுத்து இருந்ததாகவும் அனபெல் சேதுபதி கதையைக் கேட்டதும் தனது மனம் மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார் டாப்சி.

"இயக்குநர் கதையை விவரித்தபோது சுவாரசியமாக இருந்தது. மேலும் இது கற்பனை சம்பவங்கள் நிறைந்த கதை என்றும் கூறியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

"மேலும், இத்தனை ஆண்டுகளாக ஒரு ரசிகையின் கோணத்தில் இருந்து யோசித்துத்தான் படங்களைத் தேர்வு செய்கிறேன்," என்கிறார் டாப்சி.

'பேயாக நடித்தால் வெற்றி கிட்டும்'

தாம் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகிறார் நிக்கி கல்ராணி.

இவர் அடுத்து நடிக்கும் 'இடியட்' படமும் பேய்களை மையமாக வைத்துதான் உருவாகிறது.

"இதற்கு முன்பு 'டார்லிங்', 'மரகத நாணயம்' ஆகிய இரு படங்களிலும் பேயாக நடித்தேன். இரண்டுமே வெற்றி பெற்றன. அதேபோல் 'இடியட்' படமும் வெற்றி பெறும்.

"நாம் எப்போதாவது ஒருமுறையேனும் முட்டாள் தனமாக நடந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

"அவ்வாறு முட்டாள்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு என்ன ஆகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அதனால் சுவாரசியமாக இருக்கும். பேய் கதைகளுக்கே உரிய நகைச்சுவையும் உண்டு. படம் விரைவில் வெளியாகும்," என்கிறார் நிக்கி கல்ராணி.