சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள 'அரண்மனை 3' படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆர்யா நாயகனாகவும் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு ஆகியோருடன் சுந்தர்.சி.யும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
சத்யா இசையமைத்துள்ள இப்படத்தின் முக்கிய காட்சிகள் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் நாயகன் ஆர்யா பேயாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் பேய் வேடத்தில் நடிக்க அவர் தயங்கினாராம். எனினும் சுந்தர்.சி கதையை விவரித்ததும் நடிக்கச் சம்மதித்துள்ளார்.

