சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டும் நட்சத்திர ஜோடி

சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டும் நட்சத்திர ஜோடி

1 mins read
56412af6-1310-40a3-8656-b2e6af70097a
-

பாலி­வுட் நட்­சத்­திர தம்­ப­தி­ய­ரான ரன்­வீர் சிங், தீபிகா படு­கோனே இரு­வ­ரும் மும்­பை­யில் உள்ள அலி­பாக் பகு­தி­யில் புது வீடு வாங்­கி­உள்­ள­னர்.

கடற்­க­ரை­யோ­ரப் பகுதி என்­பதால் பெரிய தொழி­ல­தி­பர்­களும் திரை நட்­சத்­தி­ரங்­களும் அங்கு சொத்­துகளை வாங்கி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் ரூ.22 கோடி மதிப்பில் புது வீட்டை வாங்­கி­யுள்ள தீபி­கா­வும் ரன்­வீ­ரும் விரை­வில் அங்கு குடி­புக உள்­ள­ன­ராம். தற்­போது மும்­பை­யில் உள்ள பிர­பா­தேவி பகு­தி­யில் அமைந்­துள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் இவர்கள் இரு­வ­ரும் வசித்து வரு­கின்­ற­னர்.

இது தவிர மும்பை, பெங்­க­ளூரு என நாட்­டின் பல்­வேறு நக­ரங்­க­ளி­லும் இந்த நட்­சத்­திர ஜோடி சொத்­து­கள் வாங்கி வருவ­தா­கத் தக­வல்.