நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படத்துக்கு 'நாய் சேகர்' என்று தலைப்பு வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
ஆனால் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்துக்கும் இதே தலைப்பு சூட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் சதீஷுடன், பவித்ரா லட்சுமி நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடித்துள்ளது.
இந்நிலையில் வடிவேலுவுக்காக, 'நாய் சேகர்' என்ற தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி அதன் தயாரிப்புத் தரப்பான ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் தலைப்பை மாற்ற முடியாது என அந்நிறுவனம் கூறிவிட்டதாகத் தகவல்.
மேலும், 'நாய் சேகர்' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து அதை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே, சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' எனத் தலைப்பு வைக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

