காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி

‘கோடி­யில் ஒரு­வன்’ படம் தென்னிந்­தி­யா­வில் ஏரா­ள­மான இடங்­களில் வெளி­யீடு கண்­டி­ருப்­பது விஜய் ஆண்­ட­னியை உற்­சா­கம் அடைய வைத்­துள்­ளது.

தமி­ழ­கம், கேரளா, ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­களில் சுமார் 800 திரை­ய­ரங்­கு­களில் இப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ள­னர்.

ஆனந்த கிருஷ்­ணன் இயக்­கத்­தில் விஜய் ஆண்­டனி, ஆத்­மிகா நடிப்­பில் உரு­வாகி உள்ள இப்­ப­டத்­துக்கு நிவாஸ் கே.பிர­சன்னா இசை­ய­மைத்­துள்­ளார். படத்­துக்கு கிடைத்­துள்ள விமர்­ச­ன­மும் இது­வ­ரை­யி­லான வசூல் நில­வ­ர­மும் விஜய் ஆண்­ட­னி­யின் உற்­சா­கத்தை அதி­கப்­படுத்தி உள்­ளதாகத் தகவல்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ‘நான் கட­வுள் இல்லை’ படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் இவர் பங்­கேற்­றது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

நடி­கர் விஜய்­யின் தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் இயக்­கத்­தில் சமுத்­தி­ரக்­கனி நாய­க­னாக நடித்­துள்ள படம் இது.

மாலை ஆறு மணிக்கு தொடங்க வேண்­டிய விழா இரவு 7.30 மணிக்­கு­தான் துவங்­கி­யது. சிறப்பு விருந்­தி­ன­ரான விஜய் ஆண்­டனி வந்து சேர தாம­த­மா­னதே இதற்­குக் கார­ணம்.

அவர் காய்ச்­ச­லால் அவ­திப்­ப­டு­வ­தால் தாமத­மா­கி­விட்­ட­தாக நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர். அதன் பின்­னர் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர், விஜய் ஆண்­ட­னிக்கு உடல்­நிலை சரி­யில்லை என்ற போதி­லும் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருப்­ப­தா­க­வும் அவ­ருக்­கு நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

“அவர் எப்­போ­துமே நேர்­மறை சிந்­த­னை­யு­டன் செயல்­ப­டக் கூடி­ய­வர். அத­னால்­தான் எப்­ப­டி­யா­வது நிகழ்ச்­சிக்கு வரு­மாறு கூறி­னேன். அவ­ரும் வந்­துள்­ளார். இதன் பின்­னர் அவர் உடல்­நிலை சீரா­கி­வி­டும். அவர் வழக்கம்போல் இயங்குவார்,” என்­றார் எஸ்­ஏசி.

ஆனால், விஜய் ஆண்­ட­னிக்கு காய்ச்­சல் என்று தெரிந்­த­தும், விழா மேடை­யில் அவ­ருக்கு அரு­கில் அமர்ந்­தி­ருந்த அனை­வ­ருக்­கும் கடும் அதிர்ச்சி.

தயா­ரிப்­பா­ளர் சேவி­யர் பிரிட்டோ உட­ன­டி­யாக ஆண்­ட­னி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டாரா என்று நேரடியாக விசா­ரித்­தார்.

கடும் காய்ச்­சல் இருக்­கும்­போது எப்­படி விழா­வில் கலந்­து­கொள்ள­லாம் என்று நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த செய்­தி­யா­ளர்­கள் முணு­மு­ணுத்­த­னர்.

“ஒன்று ஆண்­ட­னிக்கு காய்ச்­சல் உள்ள விவ­ரத்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் சொல்­லா­மல் இருந்­தி­ருக்­க­லாம். அல்­லது விஜய் ஆண்­ட­னி­யா­வது நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்திருக்கலாம்,” என்று செய்தியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!