'செய்தியாளராக மாறிப்போனேன்'

'செய்தியாளராக மாறிப்போனேன்'

3 mins read
344711cc-017d-482a-97f3-3738ff5e9a1d
மிருணாளினி -

நடிக்­கத் தொடங்­கிய குறு­கிய காலத்­தி­லேயே சவா­லான கதா­பாத்­தி­ரங்­கள் தம்­மைத் தேடி வரு­வ­தா­கச் சொல்­கி­றார் நடிகை மிரு­ணா­ளினி.

'ஜாங்கோ' என்ற புதுப் படத்­தில் செய்­தி­யா­ளர் பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இதன் படப்­பி­டிப்­பின்­போது ஊட­கத் துறை குறித்து பல விஷ­யங்­க­ளைத் தெரிந்­து­கொண்­ட­தாக குறிப்­பி­டு­ப­வர், ஒரு செய்தி நிறு­வ­னம், தொலைக்­காட்சி அலை­வ­ரிசை உள்­ளிட்­டவை எவ்­வாறு செயல்­படும் என்­பதை நேர­டி­யா­கப் பார்க்­கும் வாய்ப்பு கிடைத்­தது என்­கி­றார்.

கதைப்­படி, இவரை சமூக விரோ­தி­கள் சிலர் கடத்­திச் செல்­கி­றார்­கள். அவர்­க­ளி­டம் இருந்து மிரு­ணா­ளினி தப்­பிக்க முயற்சி செய்­யும் காட்சி அண்­மை­யில் பட­மாக்­கப்­பட்­டது.

"என்­னைச் சுற்றி வளைக்­கும் நான்கு அடி­யாட்­கள் ஒரு வாக­னத்­தில் என்­னைத் திணித்து எங்கோ அழைத்­துச் செல்­வார்­கள். அதில் நடித்த நான்கு சண்­டைப்­ப­யிற்சி கலை­ஞர்­களும் என்­னை­விட இரண்டு அடி அதிக உய­ர­மாக இருந்­த­னர். பார்த்­தாலே கிலி அதி­க­ரித்­து­வி­டும்.

"உண்­மை­யில் அவர்­க­ளு­டன் நடிக்க பயந்தேன். ஆனால், காட்சி பட­மாக்­கப்­பட்டதும் நிலைமை தலை­கீ­ழா­கி­விட்­டது. இயக்­கு­நர் 'கட்' என்று சொன்ன அடுத்த நொடியே நான்கு பேரும் வேக­மாக என்னை அணுகி நலம் விசா­ரித்­த­னர்.

"என்­னைக் கடத்­தும் காட்­சி­யில் முரண்டு பிடிக்­கும் என்னை வாக­னத்­துக்­குள் வேக­மாக தள்­ளி­விட வேண்­டும். இத­னால் எனக்கு அடி­பட்டு இருக்­குமோ என்று அவர்­க­ளுக்கு கவலை. முரட்­டுத் தோற்­றம் கொண்ட அவர்­க­ளது அன்­பும் அக்­க­றை­யும் என்னை நெகிழ வைத்­தது.

"அதன் பிறகு அதே வாக­னத்­தில் அமர்ந்­து­கொண்டு அவர்­க­ளு­டன் அரட்டை அடிக்­கும் அள­வுக்கு நிலைமை மாறி­ப்போ­னது.

"இதைக் கண்டு படக்­கு­ழு­வில் இருந்த சிலர், 'இந்த பொண்ணு கடத்­தி­ய­வர்­க ளிடமே பேசிக் கொண்­டி­ருப்­ப­தைப் பாருங்க' என்று கிண்­டல் செய்­த­னர்.

"இதன் பிற­கு­தான் முர­டர்­கள் போல் காட்சி அளிக்­கும் பல­ரி­டம் குழந்தை உள்­ளம் இருக்­கும் என்று அனு­ப­வ­சா­லி­கள் சொல்­வது எந்த அளவு உண்மை என்­பது புரிந்­தது," என்­கி­றார் மிரு­ணா­ளினி.

செய்­தி­யா­ளர் வேடத்­தில் நடித்­தது உற்­சா­கம் அளித்­த­தா­க­வும் பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்­பாக அமைந்­தது என்­றும் கூறு­கி­றார்.

"துணிச்­ச­லான பெண் செய்­தி­யா­ள­ராக நடித்­துள்­ளேன். சமூக விரோ­தி­க­ளுக்கு கொஞ்­சம்­கூட பயப்­ப­டா­மல் அவர்­க­ளு­டைய இருப்­பி­டத்­துக்கே சென்று மோது­வேன். சில காட்­சி­களை சென்­னை­யில் உள்ள தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தின் அலு­வ­ல­கத்­தி­லும் அரங்­கி­லும் பட­மாக்­கி­னோம்.

"இரவு நேரலை முடிந்து ஊழி­யர்­கள் கிளம்­பிய பிறகே படப்­பி­டிப்பு தொடங்­கும். பிர­மாண்­ட­மான செய்தி அறை­யில், கேம­ராக்­கள் சூழ்ந்­தி­ருக்க, பெரிய திரை­யில் காட்­சி­கள் விரிய, அறை­யின் மையப்­ப­கு­தி­யில் அமர்ந்து வச­னங்­க­ளைப் பேசி நடித்தபோது, உண்­மை­யா­கவே நானும் செய்­தி­யா­ள­ராக நடிக்­கும் உணர்வு ஏற்­பட்­டது," என்­கி­றார் மிரு­ணா­ளினி.

படப்­பி­டிப்­பின்­போது பல்­வேறு சுவா­ர­சி­யங்­கள் அரங்­கே­றி­ன­வாம். அவற்றை நினைத்­துப்­பார்த்­தால் இப்­போ­தும்­கூட சிரிப்பு வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

கதைப்­படி, எதி­ரி­கள் மிரு­ணா­ளி­னி­யைச் சுட்­டு­வி­டு­வார்­க­ளாம். இதை­ய­டுத்து அவ­ருக்கு மூளை­யில் அறு­வை­சி­கிச்சை செய்­வது போன்ற ஒரு காட்சி பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

"அதில் நான் செய்­வ­தற்கு ஒன்­று­மில்லை. காட்சி முடி­யும்­வரை கண்­களை மூடி படுத்­தி­ருக்க வேண்­டும், அவ்­வ­ள­வு­தான்.

"அந்­தக் காட்சி எடுக்­கப்­பட்ட போது என்­னை­யும் அறி­யா­மல் தூங்­கி­விட்­டேன். காட்சி பட­மா­ன­தும் என்னை தூக்­கத்­தில் இருந்து எழுப்­பிய படக்­கு­ழு­வி­னர், 'படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டது, வீட்­டுக்­குப் போய் தூங்­குங்­கள்' என்று கிண்­டல் செய்­த­னர்.

"வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் தொடர்ந்து நடிக்க வேண்­டும் என்­பதே என் விருப்­பம். அதே சம­யம் வணி­கப் படங்­களில் நடித்­தால்­தான் அனைத்து தரப்பு ரசி­கர்­க­ளை­யும் சென்­ற­டைய முடி­யும் என்­ப­தை­யும் உணர்ந்­துள்­ளேன். அவற்றிலும் கவனம் செலுத்துவேன்," என்­கி­றார் இளம் நாயகி மிரு­ணா­ளினி.

சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வரும் இவருக்கு, தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

எனினும், கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகே மற்ற வாய்ப்புகளை ஏற்பது என முடிவு செய்துள்ளாராம் மிருணாளினி.