மானசா: ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க 'சர்வைவர்' நிகழ்ச்சி உதவும்

2 mins read
04d3a00f-e967-4127-aa6a-a460d5d96156
தன் மனைவி, குழந்தைகளுடன் நடிகர் விக்ராந்த். -

'சர்­வை­வர்' தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் போட்­டி­யா­ளர்­களில் ஒரு­வ­ரா­கப் பங்­கேற்­றுள்­ளார் நடி­கர் விக்­ராந்த்.

இயல்­பா­கவே விளை­யாட்­டுத் துறை­யில் மிகுந்த ஈடு­பாடு கொண்­ட­வர். தின­மும் தீவிர உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­ நடிகர்களில் விக்ராந்தும் ஒருவர்.

நட்­சத்­திர கிரிக்­கெட் போட்­டி­களில் அவ­ரது ஆட்­டத்­தைப் பார்க்­கும்­போதே மனி­தர் விளை­யாட்­டி­லும் சாதிக்க விரும்­பி­யுள்­ளார் என்­பது நன்­றா­கத் தெரி­யும்.

'சர்­வை­வர்' ரியா­லிட்டி நிகழ்ச்­சியை விரும்­பிப் பார்ப்­பாராம் விக்­ராந்த். அவ­ருக்கு மிக­வும் பிடித்­த­மான நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க அழைத்­த­தும் உற்­சா­மா­கி­விட்­டார் என்­கி­றார் விக்­ராந்­தின் மனைவி மானசா.

என்னதான் வாய்ப்பும் அழைப்பும் தேடிவந்தாலும், நீண்ட யோசனைக்குப் பிறகு பங்கேற்ற ஒப்புக் கொண்டுள்ளார்.

"வீட்­டில் மற்­ற­வர்­களும் இந்த நிகழ்ச்­சி­யைப் பல ஆண்­டு­க­ளா­கப் பார்த்து வரு­கி­றோம். இப்­ப­டிப்­பட்ட சாகச நிகழ்ச்­சி­யில் நிஜ­மாகவே பங்கேற்று தாக்­குப்­பி­டிக்க முடி­யுமா என்­கிற பயம் அவ­ருக்கு இருந்­தது. தவிர இரண்டு மகன்­க­ளை­யும் அவர் இது­வரை பிரிந்­ததே இல்லை.

"பெரிய மக­னுக்கு 11 வய­தும் இளைய மக­னுக்கு ஐந்து வய­து­ம் ஆகிறது. இரு­வ­ரை­யும் பார்க்­கா­ம­லும் பேசா­ம­லும் எப்­படி நாள்­க­ளைக் கடத்­தப் போகி­றாரோ, தெரி­ய­வில்லை. தவிர, திரு­ம­ண­மான இத்­தனை ஆண்­டு­களில் நானும் அவ­ரைப் பிரிந்­தது கிடை­யாது. அத­னால் இந்­தப் பிரிவு கடு­மை­யா­ன­தாக உள்­ளது," என்­கி­றார் மானசா.

கடந்த 12 ஆண்­டு­களில் படப்­பிடிப்பு, நிகழ்ச்­சி­கள், இதர வேலை­கள் என விக்­ராந்த் எங்கு சென்­றா­லும் இவ­ரும் உடன் இருப்­பா­ராம். ஒரு­வேளை போக முடி­ய­வில்லை என்­றால் தின­மும் காணொளி அழைப்­பின் மூலம் இரு­வ­ரும் பேசி விடு­வார்­க­ளாம்.

"குறைந்­த­பட்­சம் ஒரு தொலை­பேசி அழைப்­பா­வது இருக்­கும். ஆனால் 'சர்­வை­வர்' நிகழ்ச்­சி­யில் போட்­டி­யா­ளர்­க­ளு­டன் எந்த வகை­யி­லும் தொடர்பு இருக்­காது என்­பது கடி­ன­மான ஒன்­றாக உள்­ளது," என்­கி­றார் மானசா.

தன் கண­வர்­தான் இந்­தப் போட்­டி­யில் வெற்­றி­பெற வேண்­டும் எனும் எதிர்­பார்ப்பு இல்லை என்­ப­வர், மக்­க­ளு­டன் நெருக்­க­மாக இது­போன்ற நிகழ்ச்­சி­கள் உத­வும் என்­ப­தால்­தான் விக்­ராந்த் பங்­கேற்­ற­தா­கச் சொல்­கி­றார்.

இவர்­க­ளது மூத்த மகன், "அப்பா... சீக்­கி­ரம் வந்­து­வி­டுங்­கள்," என்று சொல்லி வழி­ய­னுப்ப, இளைய மகனோ, "அப்பா... வெற்­றி­யோடு திரும்­புங்­கள்," என்று கூறி­யுள்­ள­னர்.

"ஊர­டங்­கின்­போது படப்­பிடிப்­பு­கள் இல்­லா­மல் வீட்­டி­லேயே இருந்­த­தால் குழந்­தை­க­ளு­டன் அதிக நேரம் செல­விட்­டார். அத­னால் அவ­ரது பிரிவு குழந்­தை­கள் மன­தி­லும் ஏக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"விக்­ராந்த் உடற்­ப­யிற்­சி­யில் மிகுந்த ஆர்­வம் கொண்­ட­வர். அதே­போல் நீச்­ச­லி­லும் கெட்­டிக்­கா­ரர். விளை­யாட்டு, போட்டி என்று வந்­து­விட்­டால் முழு வேகத்­து­டன் ஆவே­ச­மா­கச் செயல்­ப­டு­வார். அப்­ப­டிப்­பட்­ட­வர் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் நீந்­து­வ­தற்கு சிர­மப்­பட்­டார் என்­பதை நம்ப முடி­ய­வில்லை.

"தவிர எந்­த­வொரு விஷ­யத்­தி­லும் லேசில் விட்­டுக் கொடுக்க மாட்­டார். பிரச்­சி­னை­கள் தோன்­றும்­போது இறு­தி­வரை போரா­டு­வார். கொரோனா விவ­கா­ரத்­தால் மக்­க­ளு­ட­னான தொடர்­பு­கள் அறவே இல்­லா­மல் போய்­விட்­டது. அந்த இடை­வெ­ளியை நிரப்ப இது­போன்ற நிகழ்ச்­சி­கள் உத­வும்.

"என் கண­வர்­தான் வெற்­றி­பெற வேண்­டும் எனும் பேராசை எல்­லாம் இல்லை. இந்த நிகழ்ச்­சி­யின் மூலம் அவ­ருக்கு நல்­லது நடந்­தால் சரி. இல்­லை­யேல் எதிர்­பார்ப்­பு­கள் இல்­லா­த­தால் ஏமாற்­ற­மும் இருக்­காது," என்­கி­றார் மானசா.