‘ஒப்பனையின்றி நடித்தேன்’

அறவே ஒப்­பனை இல்­லா­மல் ஒரு படத்­தில் நடித்து முடித்­துள்­ளார் ரம்யா பாண்­டி­யன்.

இதன் மூலம் தாம் எண்­ணிக்­கைக்­கா­க­வும் பணத்­துக்­கா­க­வும் மட்­டுமே நடிக்க வந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­வது தவ­றான தக­வல் என்­பதை ரசி­கர்­கள் புரிந்­து­கொள்­வார்­கள் என்­கி­றார்.

'ஜோக்­கர்', 'ஆண் தேவதை' படங்­க­ளுக்­குப் பிறகு நடி­கர் சூர்யா தயா­ரிப்­பில் உரு­வா­கி­யி­ருக்­கும் 'ராமே ஆண்­டா­லும் ராவணே ஆண்­டா­லும்' படத்­தின் மூலம் மீண்­டும் கோடம்­பாக்­கத்­துக்கு வந்­துள்­ளார் ரம்யா.

இதை­ய­டுத்து அவர் அளித்­துள்ள பேட்டி ஒன்­றில், "நல்ல கதை, சிறந்த நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றுக்­காக காத்­தி­ருப்­ப­தில் தவ­றில்லை," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சிக்­குப் பிறகு வாய்ப்­பு­கள் மழை­யா­கக் கொட்­டும் என்று எதிர்­பார்த்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அவ்­வாறு நடக்­கா­தது சிறிய ஏமாற்­றத்தை அளித்­தா­லும், தாம் துவண்­டு­போ­க­வில்லை என்­கி­றார்.

"நான் எப்­போ­தும் எதற்­கா­க­வும் தளர்ந்­து­விட மாட்­டேன். இதற்கு முன்பு 'ஜோக்­கர்' படத்­துக்கு தேசிய விருது கிடைத்­த­போது, என் மீது வெளிச்­சம் விழும், அதன் மூலம் வாய்ப்­பு­கள் தேடி­வ­ரும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டது.

"அதன் பிறகு 'ஆண் தேவதை' படத்­தில் நடித்­தேன். பல்­வேறு பிரச்­சி­னை­கள் கார­ண­மாக, தர­மான பட­மாக இருந்­தும் அது ரசி­கர்­க­ளைப் பர­வ­லா­கச் சென்­ற­டை­ய­வில்லை," என்­கி­றார் ரம்யா.

அதன் பின்­னர் வாய்ப்­பு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கா­மல் நடிப்பு பயிற்­சி­யில் ஈடு­பட்­டா­ராம். பின்­னர் திரைக்­கதை அமைக்­கும் பயிற்­சி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளார். இதை­யெல்­லாம் கேள்­விப்­பட்ட விஜய் தொலைக்­காட்சி நிர்­வா­கம் ரம்­யா­வைத் தொடர்பு கொண்டு 'குக் வித் கோமாளி', 'கலக்­கப்­போ­வது யாரு' உள்­ளிட்ட நிகழ்ச்­சி­க­ளுக்கு நடு­வ­ராக செயல்­பட அழைத்­துள்­ள­னர்.

"அது­வும் கூட நல்ல அனு­ப­வம்­தான். இப்­போது நான் எதிர்­பார்த்­தது போலவே நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமை­யத் தொடங்­கி­விட்­டன. கதை­யு­டன் எத்­த­கைய குழு அமை­கிறது என்­ப­தும் முக்­கி­யம். அதி­லும் கவ­னம் செலுத்­து­கி­றேன்," என்று சொல்­லும் ரம்யா, அடுத்து 'இடும்­பன்­காரி' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். இது இரண்டு பெண்­க­ளின் கதை­யாக உரு­வா­கி­ற­தாம். மேலும் ஓர் இணை­யத் தொட­ரி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

'ராமே ஆண்­டா­லும் ராவணே ஆண்­டா­லும்' படக்­கு­ழு­வி­னர் படப்­பி­டிப்பு தொடங்­கு­வ­தற்கு ஒரு வாரத்­துக்கு முன்பே, சிவ­கங்கை பக்­கத்­தில் படப்­பி­டிப்பு நடக்­க­வி­ருந்த மல்­லல் எனும் கிரா­மத்­துக்­குச் சென்று முகா­மிட்­டுள்­ள­னர்.

"அங்­குள்ள ஒரு சிறிய வீட்­டில் தங்க வைத்­தார் இயக்­கு­நர். தின­மும் இரண்டு மாடு­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான அனைத்­துப் பணி­க­ளை­யும் செய்ய வேண்­டும் என்­றார்.

"தின­மும் காலை­யில் ஐந்து மணிக்­கெல்­லாம் எழுந்து, தீவ­னத் தண்­ணீர் காட்­டு­வது, பிறகு கடலை மிட்­டாய் கொடுப்­பது என்று அந்த மாடு­க­ளு­டன் பழ­கத் தொடங்­கி­னேன். நடிப்­புக்­காக மேற்­கொண்ட பயிற்சி என்­றா­லும், அதன் வழி பல­வற்­றைத் தெரிந்­து­கொண்­டேன்," என்­கி­றார் ரம்யா.

இவர் நிலை­மை­யா­வது பர­வா­யில்லை. இந்­தப் படத்­தில் இவ­ரது கண­வ­ராக மிதுன் மாணிக்­கம் சுமார் ஆறு மாதங்­கள் அந்த மாடு­க­ளு­டன் பழ­கி­னா­ராம். அவற்­றைக் குளிப்­பாட்டி, உணவு வைத்து, மேய்ச்­ச­லுக்கு அழைத்­துப்­போ­வது என்று மாட்­டுக்­கொட்­டி­லி­லேயே வாழ்ந்­தி­ருக்­கி­றார்.

"அவ்­விரு காளை மாடு­களும் இந்­தப் படத்­தில் மவுன சாட்­சி­கள் போல் வரு­கின்­றன. ஒரு தாய் தான் பெற்ற பிள்­ளை­களை எப்­ப­டி­யெல்­லாம் கவ­னித்­துக்­கொள்­வாரோ, அதற்கு சற்­றும் சளைக்­கா­மல் நான் அவற்­றைக் கவ­னித்­துக் கொண்­டேன். படப்­பி­டிப்­பில் கலந்­து­கொண்ட ஒரு மாத காலம் அவற்­று­டன் தங்கி இருந்­த­தால், அந்த மாடு­க­ளுக்­கும் எனக்­கும் மத்­தி­யில் ஒரு­வித பாச வளை­யம் உரு­வா­கி­விட்­டது," என்­கி­றார் ரம்யா.

தாம் சொல்­வது எந்த அளவு உண்மை என்­பதை ரசி­கர்­க­ளால் இப்­ப­டத்­தைப் பார்க்­கும்­போது உணர முடி­யும் என்­ப­வர், இந்­தப் படத்­தில் 'வீராயி' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

இதற்கு முன்பு நடித்த 'ஜோக்­கர்' படத்­தி­லும் ரம்­யா­வுக்கு கிரா­மத்­துப் பெண் வேடம்­தான். ஆனால் அதில் வச­னங்­கள் குறைவு. இந்­தப் படத்­தில் ஓயா­மல் பேசு­வா­ராம்.

இது மிருக வதை சம்­பந்­தப்­பட்ட கதை அல்ல. குழந்­தை­கள் இல்­லாத கிரா­மத்து தம்­ப­தி­யர், இரண்டு காளை மாடு­களை வெள்ளை, கறுப்பு என்று பெயர் வைத்து தங்­கள் குழந்­தை­கள் போல் பாசத்­து­டன் வளர்க்­கி­றார்­கள்.

ஒரு­நாள் எங்­கள் மாடு­கள் காணா­மல் போகின்­றன. அவற்­றைத் தேடி அலை­யும்­போது, இந்த விவ­கா­ரம் அர­சி­ய­லாக மாறு­கிறது. இத­னால் முந்­தைய நாள் வரை அறி­யப்­ப­டாத, கண்­டு­கொள்­ளப்­ப­டாத ஒரு வறட்­சி­யாக இருந்த அந்­தக் கிரா­மத்தை நோக்கி ஊட­கங்­கள் ஓடி வரு­கின்­றன. அதற்­கான கார­ணம் என்ன என்­ப­து­தான் படத்­தின் கதை­யாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!