அடுத்த ஆண்டு 'பொன்னியின் செல்வன்-1'

1 mins read

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் தொழில்நுட்பப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை தாய்லாந்திலும் வட இந்திய நகரங்களிலும் படமாக்கி உள்ளனர்.