திருக்குறள் கூறும் ஹர்பஜன்

திருக்குறள் கூறும் ஹர்பஜன்

3 mins read
e4f09949-627c-4daf-a99b-9f55e3af0dc1
-

கிரிக்­கெட் அரங்­கில் பல்­வேறு சாத­னை­கள் புரிந்த இந்­திய வீரர் ஹர்­ப­ஜன் சிங் கோடம்­பாக்­கத்­தில் நடி­கர் அவ­தா­ரம் எடுத்­துள்­ளார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­கள், பொது மக்­கள் என அனை­வ­ரு­ட­னும் நெருக்­க­மாகி வரு­கி­றார்.

ஜான் பால்­ராஜ், ஷாம் சூர்யா ஆகிய இரு­வ­ரும் இணைந்து இயக்­கி­யுள்ள 'ஃபிரண்ட்­ஷிப்' படத்­தின் நாய­கன் ஹர்­ப­ஜன்­சிங் தான். ஏற்­கெ­னவே, 'டிக்­கி­லோனா' படத்­தில் கௌரவ வேடத்­தில் நடித்­துள்ள இவர், இப்­போது நாய­க­னாக மாறி­யுள்­ளார். நடி­கர் அர்­ஜுன் முக்­கிய வேடத்­தில் நடிக்க, நாய­கி­யாக நடித்­துள்­ளார் லாஸ்­லியா.

"இது காத­லும் நட்­பும் நிறைந்த கதை. என் காத­லி­யாக லாஸ்­லி­யா­வும் நண்­ப­ராக சதீ­ஷும் நடித்­துள்­ள­னர். அர்­ஜுன்­தான் வில்­லன்.

"இந்த வாய்ப்பு எனக்­குக் கிடைக்க ரசி­கர்­களும் சமூக வலைத்­த­ளங்­க­ளும்­தான் கார­ணம். டுவிட்­டர் உள்­ளிட்ட சில தளங்­கள் மூலம் தொடர்ந்து மக்­க­ளு­டன் தொடர்­பில் இருந்து வரு­கி­றேன்.

"சினிமா எனது முழு நேர தொழில் அல்ல. ஒன்­றி­ரண்டு வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­போது, முயற்சி செய்து பார்க்­க­லாம் எனத் தோன்­றி­யது. அதன்­படி இரண்டு படங்­களில் நடித்­து­விட்­டேன். இனி ரசி­கர்­கள்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்," என்று சொல்­லும் ஹர்­ப­ஜ­னுக்கு, தமி­ழில் ரஜி­னி­யும் விஜய்­யும்­தான் பிடித்த நடி­கர்­கள்.

கதா­நா­ய­க­னாக நடிக்­கக் கேட்டு தம்மை அணு­கி­ய­போது முக்­கிய நிபந்­தனை விதித்­தா­ராம். அது, நேரந்­த­வ­றாமை. எக்­கா­ர­ணத்­தைக் கொண்டும் நேரத்தை வீணாக்­கக் கூடாது என்­பது சிறு வயது முதலே தாம் கடைப்­பி­டித்து வரும் கொள்கை என்­கி­றார்.

வீண­டிக்­கப்­படும் நேரத்­தில் எத்­த­னையோ காரி­யங்­க­ளைச் செய்ய முடி­யும் என்று சொல்­ப­வர், தமி­ழக மக்­க­ளின் அன்பு தம்மை நெகிழ வைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தமிழ்­நாட்டு இட்­லி­யும் தோசை­யும் தமக்­குப் பிடித்­த­மான உணவு வகை­க­ளாக மாறி­விட்­டன என்­றும் சென்னை வந்­தால் அவற்­றைத்­தான் அதி­கம் சாப்­பி­டு­வ­தா­க­வும் கூறு­கி­றார். ஹர்­ப­ஜ­னுக்கு தமி­ழில் சில வார்த்­தை­கள் தெரி­யும். வணக்­கம், சாப்­பிட்­டீர்­களா, நன்­றாக இருக்­கி­றீர்­களா என்று கேட்­டு­விட்­டுத்­தான் பேசத் தொடங்­கு­கி­றார்.

இதை­விட முக்­கி­யம், இந்­தச் சாதனை வீர­ருக்கு சில திருக்­கு­றள்­களும் தெரி­யும். தமி­ழ­கத்­தில் அவ­ருக்கு நெருங்­கிய நண்­ப­ரான சர­வ­ணன் என்­ப­வர்­தான் கற்­றுக்கொடுத்­துள்­ளார்.

"எனது டுவிட்­டர் பதி­வு­கள் ரசி­கர்­கள் மத்­தி­யில் ரொம்­பப் பிர­ப­லம். அதற்கு சர­வ­ணன்­தான் கார­ணம். எந்­த­வொரு பதி­வாக இருந்­தா­லும், என்­னி­டம் சொல்லி­விட்­டுத்­தான் செய்­வார்.

"அண்­மை­யில் வெளி­யான 'சார்­பட்டா பரம்­பரை' படம் பற்­றி­யும் அந்த சைக்­கிள் வாத்­தி­யார் குறித்­தும் என்­னி­டம் விவ­ரித்த பிறகே, 'சைக்­கி­ளில் ஒரு ரவுண்டு கிடைக்­கு­மா' என்ற டுவிட் போடப்­பட்­டது. ஏரா­ள­மா­னோர் அதை ரசித்­த­னர்.

"படங்­க­ளைத் தேர்வு செய்­வ­தற்கு எந்­த­வித அள­வு­கோ­லும் என்­னி­டம் இல்லை. அண்­மைக் கால­மாக நான் அதி­க­மான கிரிக்­கெட் போட்­டி­களில் ஆடு­வ­தில்லை. எனவே நிறைய நேரம் இருப்­ப­தா­கத் தோன்­றி­யது. அந்த அடிப்­ப­டை­யில்­தான் சினி­மா­வில் நடிக்­க­லாம் என முடிவு செய்­தேன்.

"நாம் எதற்­காக இந்­தப் படத்­தில் நடிக்க வேண்­டும் எனும் கேள்­வியை எனக்கு நானே கேட்­டுக்கொள்­கி­றேன்.

"என் மன­துக்கு சரி­யெ­னப்­பட்­டால் நடிப்­பேன், அவ்­வ­ள­வு­தான்," என்று சொல்­லும் ஹர்­ப­ஜ­னுக்கு, நடி­கர் சதீ­ஷம் சில தமிழ் வார்த்­தை­கள் கற்­றுக்கொடுத்­தா­ராம்.

ஆனால் அவை அனைத்­தும் வசவு வார்த்­தை­கள் என்­ப­தால் யாரி­ட­மும் பயன்­படுத்த முடி­ய­வில்லை என்று புன்­ன­கைக்­கும் ஹர்­ப­ஜன், தொடர்ந்து தமி­ழில் நடிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றார்.

"தமிழ் சினி­மா­வில் நட்­பும் அன்­பும் கேட்­கா­ம­லேயே கிடைக்­கிறது. தமிழ்ப் படங்­கள் யதார்த்­த­மான படைப்பு­க­ளாக உள்­ளன. எல்­லோ­ருமே நூறு விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக உழைக்­கின்­ற­னர். இங்கு கற்றுக்­கொள்ள நிறைய விஷ­யங்­கள் உள்­ளன," என்­கி­றார் ஹர்­ப­ஜன்.