திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
dc9d3962-59cb-405e-a579-b342d54b4c72
-
multi-img1 of 2

நாயகி வாய்ப்பை உதறிய ஐஸ்வர்யா

கதாநாயகியாக நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனது கதா பாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்து அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கில் 'பீம்லா நாயக்' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில் பவன்கல்யாண், ராணா டகுபதி இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஐஸ்வர்யாவும் நித்யா மேனனும் நாயகிகளாக ஒப்பந்தமானதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ஏற்கும் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை இயக்குநர் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழில் நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா. இதையடுத்து தெலுங்குப் படத்தில் இருந்து அவர் விலகியதாகத் தெரிகிறது.

நடனம் கற்றுத் தந்த சாய் பல்லவி

தெலுங்கு முன்னணி நாயகர்களில் ஒருவரான நாகசைத்தன்யா, புதுப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக தன்னுடன் நடித்த சாய் பல்லவியிடம் நடன அசைவுகளைக் கற்றுக் கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

'லவ் ஸ்டோரி' என்ற தெலுங்குப் படத்தில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பின்போது சாய் பல்லவி அனைத்து நடன அசைவுகளையும் எளிதில் கற்றுக்கொண்டு அசத்தலாக ஆடியுள்ளார்.

"நான் நடனத்தில் திறமைசாலியல்ல. அதனால் சாய் பல்லவியிடம் சில அசைவுகளைக் கற்றுக்கொண்டேன். அவர் என்னைவிட சிறப்பாக ஆடியுள்ளார்," என்று நாகசைத்தன்யா தெரிவித்துள்ளார்.

முன்னணி நாயகனின் பாராட்டுகளைப் பெற்ற சாய் பல்லவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'லவ் ஸ்டோரி' படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.