இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடிக்க விரும்பவில்லை என்கிறார் லாஸ்லியா.
அங்கு நடைபெற்ற அனைத்தையும் நேரில் கண்டதை தம் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் நடிப்பில் 'ஃபிரண்ட்ஷிப்' படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள போதிலும், லாஸ்லியாவின் நடிப்பை பலர் பாராட்டி உள்ளனர்.
"கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து நடித்தது மறக்க இயலாது அனுபவம். நான் இந்தியக் கிரி்க்கெட் அணியின் தீவிர ரசிகை. சிறு வயது முதல் என் தந்தையுடன் அமர்ந்துதான் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்ப்பேன்.
"ஹர்பஜன் பல சாதனைகளைப் புரிந்தவர். அவருடன் இணைந்து நடிக்கப்போகும் தகவலைச் சொன்னபோது அப்பா மிகவும் மகிழ்்ச்சி அடைந்தார்.
"ஹர்பஜன் மிக எளிமையான மனிதர். பெரிய கிரிக்கெட் வீரர் என்ற பந்தா இல்லாமல் இயல்பாகப் பேசினார்," என்கிறார் லாஸ்லியா.
மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படியான கதாபாத்திரங்கள்தான் எனது தேர்வு. அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க நினைக்கிறேன்.
"அதேசமயம் இலங்கைத் தமிழர் சம்பந்தப்பட்ட கதைகளை தவிர்க்கிறேன். அங்கு நடந்த கொடுமைகளை மறக்க இயலாது. அவற்றை நேரில் கண்டவர்களில் நானும் ஒருத்தி. அத்தகைய கதையம்சங்கள் கொண்ட பட வாய்ப்புகளை ஏற்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.
"அந்த வாய்ப்புகளை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே என் மனம் ஏற்காது என நினைக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் கிடைப்பது மனநிறைவு அளிக்கிறது. இதுவே போதுமானது," என்கிறார் லாஸ்லியா.
தம்மிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் நட்பாகப் பேசும் லாஸ்லியா முழுக் கதையையும் கவனமாகக் கேட்டுக்கொள்கிறாராம். மேலும், தமது கதாபாத்திரத்தை மெருகேற்ற இயக்குநரிடம் ஆலோசனை கேட்கவும் அவர் தவறுவதில்லை.
லாஸ்லியா

